இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் சுதாமூர்த்தி தம்பதியினரை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்தான் நாராயணமூர்த்தி. இன்றளவும் தொடர்ந்து தொழில் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் இயங்கி வரக்கூடியவர். அவரது மனைவி சுதா மூர்த்தி கூட அண்மையில் நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவ்விருவரும் அவ்வப்போது பொது மேடைகளில் தோன்றி தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும் எவ்வாறு தொழிலில் முன்னேற வேண்டும் என்பது குறித்தும் பகிர்வார்கள்.

அந்த வகையில் நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தி அண்மையில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பான தி கிரேட் இந்தியன் கபில் சர்மா ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்களின் வாழ்க்கை நடந்த பல சுவாரசியமான தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
நாராயணமூர்த்தி தன்னுடைய 25ஆவது திருமண நாளையே மறந்து விட்டாராம். அன்றைய தினம் அவருக்கு மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததாம் அங்கே இவர் முக்கிய உரையாற்றுவதாக இருந்துள்ளது. எனவே அவர் இதற்காக தயாராகி இருந்திருக்கிறார். அப்போது சுதா மூர்த்தி அவரிடம் "இன்று ஏதாவது முக்கியமான தினமா?" என வினவியுள்ளார்.
அதற்கு நாராயணமூர்த்தி "இல்லையே அப்படி ஒன்றும் இல்லை" எனக் கூறிவிட்டு அலுவலகம் சென்று செல்ல தயாராகினாராம். அவர் காரில் ஏறும்போது கூட சுதா மூர்த்தி மீண்டும் ஒருமுறை " இன்னைக்கு ஏதோ ஒரு முக்கியமான தினம் என தோன்றுகிறது, சிந்தித்துப் பாருங்களேன் " எனக் கூறினாராம். அதற்கு அவர் அப்படி ஒன்றும் இல்லை எனக் கூறிவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டாராம்.
பின்னர் அவர் அலுவலகத்தில் இருந்து மும்பைக்கு கிளம்பி கொண்டு இருந்தாராம். அப்போது அவர்களின் மகள் அக்ஷதா மூர்த்தி, நாராயண மூர்த்தியை தொலைபேசியில் அழைத்தாராம். அப்பா என்ன செய்கிறீர்கள் என கேட்டதற்கு நான் மும்பைக்கு செல்வதற்காக விமானத்தில் புறப்பட இருக்கிறேன் என கூறினாராம், அதற்கு அவருடைய மகள் உடனடியாக அதனை ரத்து செய்து விடுங்கள்.
பெங்களூருக்கு செல்லுங்கள் சென்று உங்கள் மனைவியிடம் திருமண நாள் வாழ்த்து கூறுங்கள் என சொன்னாராம் .அப்போதுதான் அவருக்கு இன்று தங்களுடைய திருமணநாள் அதுவும் 25வது திருமண நாள் என்பது நினைவுக்கு வந்ததாம்.
அப்போது அவர் அக்ஷதாவிடம் எனக்கு மூன்று மணிக்கு மும்பையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது அங்கே நான் உரையாற்ற இருக்கிறேன் என்று சொன்னாராம். அதற்கு அவருடைய மகள் அது எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி நீங்கள் தனியாக ஒரு விமானத்தைக் கூட வாடகைக்கு எடுங்கள் ஆனால் அம்மாவிற்கு சென்று வாழ்த்து கூறுங்கள் என கூறினாராம்.
இதனை புன்னகையோடு பகிர்ந்து கொண்ட சுதா மூர்த்தி அது எங்களுடைய 25ஆவது திருமண நாள் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஒரு நாள் வராது, நான் இது பற்றி தான் அவரிடம் பல்வேறு க்ளூ கொடுத்து கேட்டேன் ஆனால் அவர் அதை மறந்து விட்டார். இதனால் என்னை விட என் மகள் தான் மிகவும் அப்செட் ஆனார் என கூறினார்.
அமெரிக்காவில் இதுபோன்று நடக்காது என தன்னுடைய மகள் அப்போது தன்னிடம் தெரிவித்ததாகும் அதற்கு இந்தியாவில் இது நடக்கும் என பதில் அளித்ததாக சுதா மூர்த்தி கூறியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications