மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய வட்டத்திற்குள் இருந்த இளைஞர் சாந்தனு நாயுடு குறித்து தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இன்ஜினியரிங் படித்து முடித்து இன்டர்னாக டாடா குழுமத்தில் இணைந்தவர் தான் சாந்தனு நாயுடு.
தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையால் ரத்தன் டாடாவால் ஈர்க்கப்பட்டார். விலங்குகள் மீதான குறிப்பாக தெரு நாய்களை பாதுகாப்பதற்காக சாந்தனு நாயுடு கொண்டு வந்த ஒரு முயற்சி தான் டாடாவையும் சாந்தனுவையும் நெருக்கமானவர்களாக மாற்றியது.

இதனை அடுத்து ரத்தன் டாடாவின் ஜெனரல் மேனேஜராக நியமிக்கப்பட்டார் சாந்தனு நாயுடு. நவயுக இளைஞரான சாந்தனு நாயுடுவுக்கு ரத்தன் டாடாவுக்கும் இடையிலான நட்பு பலராலும் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
ரத்தன் டாடாவின் பிரிவு விட்டு சென்றிருக்கும் இந்த வெற்றிடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன் எனக் கூறியுள்ள சாந்தனு நாயுடு அன்பின் விலை துக்கம் தான் சென்று வாருங்கள் எனது கலங்கரை விளக்கமே என பதிவு செய்துள்ளார்.
ரத்தன் டாடாவுடனான தன்னுடைய அனுபவத்தை சாந்தனு நாயுடு ஒரு புத்தகமாகவும் எழுதி இருக்கிறார். "I Came Upon a Lighthouse: A Short Memoir of Life with Ratan Tata" என்ற புத்தகத்தில் ரத்தன் டாடாவை சந்திப்பதற்காக தன்னுடைய ஊதியத்தில் பாதி தொகை வழங்கி ஒரு ஆடையை வாங்கியதை குறித்த சுவாரஸ்யமான பதிவினை சாந்தனு நாயுடு வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் சாந்தனு நாயுடு எழுதிய புத்தகத்தில் சாதாரண இன்டர்னாக டாடா குழுமத்தில் பணிக்கு சேர்ந்து ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பராக எப்படி மாறினேன் என்பது குறித்து சாந்தனு நாயுடு விரிவாக பதிவிட்டுள்ளார்.
சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவுக்கு முதன்முறையாக ஒரு கடிதம் எழுதினாராம். அந்த கடிதம் தான் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்புக்கு காரணமாக இருந்துள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இருந்த விலங்குகள் மீதான காதல், நட்பை மேலும் அதிகப்படுத்தியது.
சாந்தனு நாயுடு மேல் படிப்புக்காக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்காக தயாரானாராம். அப்போது அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பாக ரத்தன் டாடாவை சந்திக்க வேண்டும் என அவர் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார் .
ரத்தன் டாடாவும் தன்னை சந்திக்க சாந்தனு நாயுடுவுக்கு அனுமதி கொடுத்துள்ளார். அப்போது ஒரு இரவு விருந்துக்கு ரத்தன் டாடா ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்விற்கு ரத்தன் டாடாவுக்கு பிடித்த வகையில் ஆடை அணிந்து செல்ல வேண்டும் என விரும்பினாராம் சாந்தனு நாயுடு. அப்பொழுதுதான் ரத்தன் டாடாவின் விருப்பமான பிராண்ட் புரூக் பிரதர்ஸ் என்பது அவருக்கு தெரியவந்தது. எனவே புரூக் பிரதர்ஸ் பிராண்டில் ஒரு சட்டையை வாங்கி இரவு விருந்துக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தாராம்.
அந்த ஒரு சட்டையை வாங்குவதற்காக தன்னுடைய மாத சம்பளத்தில் பாதி தொகையை தான் செலவிட வேண்டி இருந்தது என்பதையும் தன்னுடைய புத்தகத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதன் பின்னர் ஒரு முறை சாந்தனு நாயுடும் ரத்தன் டாடாவும் அமெரிக்காவில் சந்தித்துள்ளனர்.
அப்போது சாந்தனு நாயுடுவுக்கு ரத்தன் டாடா ப்ரூக் பிரதர்ஸ் பிராண்ட் சட்டையை வாங்கி பரிசளித்தாராம். கடையில் தான் பணம் செலுத்த முன் வந்த போது ரத்தன் டாடா என் நண்பனுக்கு நான் சட்டை வாங்கி தர கூடாதா என கேட்டாராம். அன்று முதல் இவர்களின் நட்பு இன்னும் வலுவடைந்ததாக சாந்தனு நாயுடு தன்னுடைய புத்தகத்தில் கூறியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications