டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கைக்கு மத்தியில், தொடர்ந்து கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி ரூபாய் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. சரிந்து போன அதானி சாம்ராஜ்ஜியத்தினை மீட்டெடுப்பது எப்படி? என பல நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டு வந்தாலும், இன்று வரையில் அதானி குழுமம் மீண்ட பாடாக இல்லை.
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியானதில் இருந்து, அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது.
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது கேட்ட 88 கேள்விகளுக்கு சரியான பதிலை கூற முடியாமல் அதானி குழுமம் அவைகளை தவிர்த்தது.
அதானியின் விருப்பம்
இதற்கிடையில் அதானி குழுமம் அமெரிக்காவில் ஒரு வழக்கை தாக்கல் செய்ய விரும்புவதாகவும் தெரிகின்றது. இதே இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் இதில் பல ஆவணங்களை அதானி குழுமத்திடம் கேட்போம். ஆக அதனை அதானி கொடுக்க வேண்டியிருக்கும்.
எஃப்பிஓ ரத்து
அதானி குழுமத்திற்கு எதிரான குழப்பமான அறிக்கையானது, அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களை கணிசமாக பாதித்துள்ளது. ஹிண்டர்ன்பர்க்கின் அறிக்கைக்கு பிறகு அதானி குழுமம் கடும் சரிவினைக் கண்டுள்ளது. அதானி குழுமத்தின் எஃப்பிஓ-வினையே ரத்து செய்தது.
106 பக்க அறிக்கை
ஹிண்டர்ன்பர்க்கின் 106 அறிக்கைக்கு மத்தியில், அதானி குழுமம் சட்ட நடவடிக்கை என்பதை எடுக்காமல் இதுவரையில் காலம் தாழ்த்தி வருவது ஏன்? இதுவரையில் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பினை இழந்துள்ளது.
இதற்கிடையில் அதானி குழுமம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு ஹடை விதிக்க கோரியிருந்த மனுவானது, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கு ஒத்தி வைப்பு
ஏற்கனவே அதானி - ஹிண்டர்ன்பர்க்கை பிரச்சனை குறித்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரிப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பாக சீலிடப்பட்ட உறையில் பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உச்சநீதிமன்றமே குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை முடிவு செய்யும் என வழக்கை ஒத்தி வைத்தது.
தடை விதிக்கணும்?
இதற்கிடையில் தான் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அதானி குழுமம் -ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அதானி குழுமம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரியிருந்த மனுவானது, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
விரைவில் உத்தரவு வரும்
மேலும் விரைவில் இந்த இது குறித்தான எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் தொடர்பான வழக்கில் கூடிய விரைவில் உரிய உத்தரவை பிறப்பிப்போம் என கூறியுள்ளனர்.
ஒரு புறம் இப்படி பல நடவடிக்கைகளை அதானி குழுமம் எடுத்து வந்தாலும்., மறுபுறம் இன்று வரையில் சட்டப்பூர்வ நடவடிக்கையை அமெரிக்காவில் எதிர்கொள்ள போவதாக தெரிவித்து இருந்த நிலையில், இது குறித்து எதுவும் வெளியாகவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications