தேர்வு முடிந்தது, இனி ரிசல்ட் திருவிழாதான்.. 2026ம் ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. தேர்வு மையங்களில் பணி புரிந்த சுமார் 3 லட்சம் ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதிய முறையின் (IPS) கீழ் சம்பளத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது சிபிஎஸ்இ.
மறுபுறம், வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளுக்கான மதிப்பெண் பதிவேற்றம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற போகிறது. ரிசல்ட் எப்போது வரும்? அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை பார்ப்பது எப்படி? முக்கிய தகவல்களை பார்ப்போமா?
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அதிகரிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அனைத்து தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் தங்கள் OECMS போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் சில பள்ளிகள் பணியாளர்கள் அல்லது மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தவறான தகவல்களை வழங்கியதால், ஒருங்கிணைந்த கட்டண முறையில் (IPS) தவறான பணக் கோரிக்கைகள் உருவானது கண்டறியப்பட்டது. இதற்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கான பணம் வழங்கும் IPS முறை, முழுமையாக OECMS போர்ட்டலில் இருந்து பெறப்படும் தானியங்கி தரவுகளையே நம்பியுள்ளது. எனவே நிதி தொடர்பான தவறுகளை தவிர்க்க, பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள், மாணவர்களின் வருகை (வருகை தந்தோர் மற்றும் வராதோர்) மற்றும் பயன்படுத்தப்பட்ட தேர்வு அறைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை பள்ளிகள் இப்போது கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
தங்கள் தரவுகளில் ஏதேனும் பிழைகள் அல்லது விடுபட்ட தகவல்கள் இருப்பதை கண்டறியும் பள்ளிகள், திருத்தப் பணிகளை மேற்கொள்ள ஏப்ரல் 11, 2026க்குள் அந்தந்த மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த பட்டிருந்தது. தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, அனைத்து திருத்தங்களும் மண்டல அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலேயே செய்யப்பட வேண்டும்.
இந்த முழு செயல்முறையும் ஏப்ரல் 13, 2026க்குள் முடிக்கப்பட வேண்டும் என சிபிஎஸ்இ கெடு விதித்துள்ளது. இந்த காலக்கெடு முடிந்த பிறகு, தரவுகளை மாற்ற கோரும் எந்த ஒரு விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது. பொதுத் தேர்வுகள் முடிந்தவுடன் இறுதி பணிகளை வழங்குவதற்கான IPS முறை தொடங்கப்படும் என்பதால், தேர்வு மையங்கள் தங்கள் நிர்வாக சேவைகளுக்கான சரியான ஊதியத்தை பெற இதுவே கடைசி வாய்ப்பாகும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் 2026?
தேர்வு முடிவுகள் தயாரிப்பு குறித்த முக்கிய அம்சங்கள்:
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் கீழ்க்கண்ட தளங்கள் மூலம் முடிவுகளை சரி பார்க்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளமான https://results.cbse.nic.in/ என்ற பக்கத்தில் சென்று பார்க்கலாம் அல்லது https://www.cbse.gov.in/ என்ற தளத்திலும் பார்த்து கொள்ளலாம்.
டிஜிலாக்கர் (DigiLocker): டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற மாணவர்கள் தங்களின் ஆறு இலக்க பாதுகாப்பு பின் நம்பரை (Security PIN) தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உமாங் ஆப் (UMANG App): மொபைல் மூலம் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த செயலியையும் பயன்படுத்தலாம்.
விரைவில் தேர்வு முடிவுகள் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications

