சென்னை: இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா , கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இதில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு இடையே 1 டிரில்லியன் ஜிடிபி என்ற இலக்கை எட்டுவதற்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக செபியில் பதிவு செய்யப்பட்ட நிதி திட்டமிடல் நிபுணரான டி.முத்துகிருஷ்ணன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவினை வெளியிட்டுள்ளார். கிராக் ஏஐ செயலியிடம் கேட்டு அது அளித்த தகவலை அவர் பதிவு செய்துள்ளார்.

அதன்படி மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் எந்த மாநிலம் கூடிய விரைவில் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற நிலையை எட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் என்ற நிலையை எட்டுவதற்கு மகாராஷ்டிரா பொருளாதாரம் ஆண்டுக்கு 18.6 சதவீதம் என்ற வளர்ச்சியை அடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் ஜிடிபியை எட்ட ஆண்டுக்கு 16 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டி இருக்கும் என தெரித்துள்ளார். தமிழ்நாடு அரசு தீவிரமான கொள்கைகளைக் கொண்டு வந்து தற்போது இருக்கும் சில இடைவெளிகளை பூர்த்தி செய்தாலே 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதாரத்தை எட்டி விட முடியும் என கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இந்த போட்டியில் முன்னிலையில் இருப்பது மகாராஷ்டிரா தான் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை பொருத்தவரை 2030ல் இருந்து 2032க்குள் தன் இலக்கை எட்டும் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2032 முதல் 2034ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான பொருளாதார சூழல், அந்தந்த மாநிலத்தில் எப்படி அரசின் கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன, முதலீடுகள் எவ்வாறு ஈர்க்கப்படுகின்றன, இவற்றையெல்லாம் பொறுத்து இந்த காலம் மாறும் என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்தியாவில் தற்போதைக்கு மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களும் தான் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார போட்டியில் முன்னிலையில் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடலோரம் இருப்பதால் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் என ஏற்றுமதி இறக்குமதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. எனவே தான் இந்த இரண்டு மாநிலங்களிலும் வாகன உற்பத்தி மற்றும் செல்போன் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. எலான் மஸ்கின் டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டுவர வேண்டுமென இரண்டு மாநிலங்களும் கடுமையாக போட்டி போடுகின்றன.
தற்போதைக்கு தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் பார்க்கும்போது மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் இருக்கிறது, தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழ்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications