சென்னை: முதலீடு செய்யும் தொகை எப்பொழுது இரட்டிப்பாகும்.. எப்பொழுது நிறைய லாபத்தை பெற முடியும்.. என்று பலர் முதலீடு செய்த கையோடு சிந்திக்கத் தொடங்கி விடுகின்றனர். நிறைய வகை முதலீடுகள் உள்ளன. அவற்றில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டங்கள், பேங்க் வழங்கும் முதலீட்டு திட்டங்கள் என பல வகைகள் இருக்கின்றன. இந்த முதலீடுகளின் வருமானமும், அந்தந்த திட்டத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும். தங்களுடைய முதலீட்டு வருமானம் எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் உடையவர்களுக்கு தான் இந்தப் பதிவு.
வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், போஸ்ட் ஆபீஸ்கள் என எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். சிலர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றிலும் முதலீடு செய்கின்றனர். அனைவருக்கும் வரும் கேள்வி என்னவென்றால் எப்போது தங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும் என்பதுதான். இதற்கான பதிலை ரூல் 72 என்பதை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.

ரூல் 72: எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, உங்களுடைய முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்பதன் தோராயமான கால அளவை தீர்மானிக்க, இந்த ரூல் 72 பயன்படுகிறது.
ரூல் 72 என்றால் என்ன?: ரூல் 72 பற்றி புரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் முதலீடு செய்த முதலீட்டு திட்டத்தின் ஆண்டு வருடாந்திர வருவாய் விகிதத்தை கொண்டு 72-ஐ வகுக்கவும். அது எந்த மூதலீட்டு திட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் திட்டத்தின் ஆண்டு வருடாந்திர வருவாய் விகிதம் தெரிந்தால் மட்டும் போதுமானது. இதை வைத்து உங்களுடைய முதலீட்டுத் தொகை எப்பொழுது இரட்டிப்பாகும் என்பதை எளிதாக கூறிவிடலாம்.
எடுத்துக்காட்டாக நீங்கள் 8 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கும் முதலீட்டு திட்டத்தில் ரூ. 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், 72-ஐ 8ஆல் வகுத்தோம் என்றால் 9 கிடைக்கும். அதாவது உங்கள் ரூ. 1 லட்சம் முதலீடு, இரட்டிப்பாகி ரூ. 2,00,000ஆக வளர சுமார் 9 ஆண்டுகள் ஆகலாம் என்பது பொருள்.
ரூல் 144 என்றால் என்ன?: அதேபோல, சிலர் தங்களுடைய முதலீட்டு வருமானம் 4 மடங்காக உயர வேண்டும் என்று கூட யோசிப்பார்கள். அது போல் உள்ள நபர்கள் ரூல் 144-ஐ பயன்படுத்தலாம். ரூல் 144-இன் படி, உங்கள் முதலீட்டை நான்கு மடங்காக உயர்த்துவதற்கு தேவையான நேரத்தை கணக்கிடலாம்.
ரூல் 72க்கு நீங்கள் பயன்படுத்திய அதே பார்முலா தான் இங்கும் பயன்படுத்த வேண்டும். நீங்க முதலீடு செய்த திட்டத்தின் வருடாந்திர வருவாய் விகிதத்தை 144-ஐ கொண்டு வகுக்கவும்.
எடுத்துக்காட்டாக நீங்கள் 9 சதவீதம் வருடாந்திர வருமானத்தை தரும் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறீர்கள், என்றால் 144-ஐ 9ஆல் வகுக்கவும். இதற்கு 16 என்று வரும். இதன் பொருள் உங்களுடைய 9 சதவீத வருடாந்திர வருமானத்தை நான்கு மடங்காக வளர வைக்க 16 ஆண்டுகள் ஆகும் என்பதாகும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications