சென்னை: 2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த நகரம் எங்கே அமைக்கப்பட இருக்கிறது என்பதுதான் தற்போது பலரது கேள்வியாக இருக்கிறது.
சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படும் என அறிவித்த தங்கம் தென்னரசு அந்த நகரம் எந்த இடத்தில் அமைகிறது என்ற விவரங்களை வெளியிடவில்லை. தமிழ்நாடு அரசினை பொருத்தவரை தற்போது சென்னைக்குள் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், மும்பைக்கு எப்படி நவிமும்பை இருக்கிறதோ பெங்களூருக்கு எப்படி வைட்ஃபீல்டு இருக்கிறதோ அதேபோல சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த புதிய நகரத்தை உருவாக்குவதற்கு தேவையான நிலத்தை கண்டறிந்து அதனை கையகப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

அரசு இந்த புதிய நகரத்தை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் பகுதியில் அமைக்கலாம் அல்லது செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அமைக்கலாம் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இருங்காட்டுக்கோட்டை, மேல்பாடி, சோகண்டி, புல்லலூர், சூரை ஆகிய பகுதிகளில் அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போதைக்கு சென்னையை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் புதிய நகரத்தை அமைப்பதற்கான இடம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறியும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தான் தங்கம் தென்னரசு எந்த இடத்தில் இந்த நகரம் அமைகிறது என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்த புதிய நகரத்தை பொறுத்தவரை ஐடி பூங்காக்கள், ஃபின் டெக் நிறுவனங்கள், ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் ,வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், கருத்தரங்கு மையங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் ,மருத்துவமனைகள் உள்ளிட்டவை அனைத்தும் உலக தரத்தில் அமைக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பு என்ற ஒப்பந்தத்தின் கீழ் தான் இவை அமைய இருக்கின்றன.
இந்த புதிய நகரத்தில் பல அடுக்குமாடிக்கொண்ட குடியிருப்புகள் இருக்கும் என்றும் நவீன சாலை போக்குவரத்து இணைப்புகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அது தவிர சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த நகரம் கட்டமைக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர் . கூடிய விரைவில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ இந்த புதிய நகரத்திற்கான ஆய்வு பணிகளை தொடங்க இருக்கிறது.
அரசுக்கு 2000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கண்டறிந்து கையகப்படுத்துவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை பெரிய சவாலாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைக்கு சென்னை பெங்களூர் சாலையில் பல்வேறு தொழிற்சாலைகள் இருக்கின்றன, ஓஎம்ஆர் சாலையை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கும் வகையில் இந்த புதிய நகரத்தை அமைத்தால் அது மிகச்சிறந்த வளர்ச்சி பெறும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசு எந்த இடத்தை தேர்வு செய்கிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

சித்தராமையாவின் 17-வது பட்ஜெட்: ரோஹித் வெமுலா சட்டம் முதல் இலவச இன்சுலின் வரை.. 10 முக்கிய அம்சங்கள்!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications