Air India Crash: ஏர் இந்தியா விமானம் விழுந்த இடம் என்ன தெரியுமா..? கொத்துகொத்தாக டாக்டர்கள் பலியா..?!

ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்ல புறப்பட்டு 600-700 மீட்டர் பறந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் 242 விமான பயணிகளுடன் பறந்த நிலையில், அகமதாபாத்தின் மேகானி நகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவகத்தில் மோதி வெடித்து சிதறியது. விமானம் மோதி வெடித்த சத்தமும், புகைமண்டலமும் இப்பகுதியை சூழ்ந்தது.

Air India Crash:ஏர் இந்தியா விமானம் விழுந்த இடம் என்ன தெரியுமா..? கொத்துகொத்தாக டாக்டர்கள் பலியா..?!

விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் இளநிலை மாணவர்கள் விடுதியின் உணவகத்தில் மோதியதால், பல மருத்துவ மாணவர்கள் காயமடைந்தனர், இதேபோல் பல மரணம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது என சமுக வலைத்தளத்தில் பதிவுகள் வந்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் அகில இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (FAIMA) வெளியிட்ட அறிக்கையில், "அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து அதிர்ச்சியளிக்கிறது. விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதால், பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்," என தெரிவித்தது. இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது காணாமல் போன மாணவர்கள் குறித்து உறுதியான தகவல் இல்லை என FAIMA தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

Air India Crash:ஏர் இந்தியா விமானம் விழுந்த இடம் என்ன தெரியுமா..? கொத்துகொத்தாக டாக்டர்கள் பலியா..?!

விபத்து நடந்தவுடன், காந்திநகரில் இருந்து மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் சுமார் 90 பணியாளர்களுடன், மீட்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டன. மேலும், வடோதராவில் இருந்து மூன்று கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை உடனடியாக விபத்து இடத்திற்கு விரைந்தன. மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Air India Crash:ஏர் இந்தியா விமானம் விழுந்த இடம் என்ன தெரியுமா..? கொத்துகொத்தாக டாக்டர்கள் பலியா..?!

பிரதமர் நரேந்திர மோடி, இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். "அகமதாபாத் விபத்து மனதை உலுக்குகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கல்கள்," என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "இந்த துயர சம்பவம் இதயத்தை உடைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க இந்தியா உறுதுணையாக நிற்கும்" என தெரிவித்தார்.

Air India Crash:ஏர் இந்தியா விமானம் விழுந்த இடம் என்ன தெரியுமா..? கொத்துகொத்தாக டாக்டர்கள் பலியா..?!

விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன. போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவும் விசாரணையில் இணைய வாய்ப்புள்ளது. இந்த விபத்து விமானத்தின் இரு இன்ஜின்களும் செயல் இழந்தது மூலம் ஏற்பட்டது என கூறப்படும் வேளையில் இத்தகைய கோளாறு விமானத்தில் அரிதினும் அரிது எனவும் கூறப்படுகிறது.

Air India Crash:ஏர் இந்தியா விமானம் விழுந்த இடம் என்ன தெரியுமா..? கொத்துகொத்தாக டாக்டர்கள் பலியா..?!

ஏர் இந்தியா, பயணிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவ 1800 5691 444 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும், அவசர உதவி மையம் செயல்படுத்தப்பட்டு, தகவல் தேடும் குடும்பங்களுக்கு உரிய தகவல்களை அளித்து வருகிறது. இந்த துயர சம்பவம், அகமதாபாத் மற்றும் இந்தியா முழுவதும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+