இந்திய பணக்காரர்கள் அதிகம் முதலீடு செய்யும் இடம் இதுதான்..!

பொதுவாகப் பெரும் பணக்காரர்கள் தங்களது முதலீட்டை நீண்ட கால வளர்ச்சியின் அடிப்படையின் வாயிலாக முதலீடு செய்யும் காரணத்தால் வளர்ச்சியின் வேகம் குறைவாக இருந்தாலும், லாபம் நிச்சயம். இதேவேளையில் மொத்த முதலீட்டையும் நீண்ட கால முதலீட்டில் செய்யமாட்டார்கள் கட்டாயம் பல துறையில், பல பிரிவுகளில் முதலீட்டை பிரித்துத் தான் போடுவார்கள்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இந்திய பணக்காரர்கள் தேடி தேடி அதிகளவில் முதலீடு செய்தது எந்த விஷயத்திற்குத் தெரியுமா..?

பெரும் பணக்காரர்கள்

பெரும் பணக்காரர்கள்

இந்தியாவின் அல்ட்ரா ஹை நெட் வொர்த் தனிநபர்கள் அல்லது UHNWI-க்கள் தங்கள் பணத்தை எவ்வாறு செலவழித்து முதலீடு செய்கிறார்கள் என்பது பற்றி நைட் ஃபிராங்க் வெல்த் 2022 அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் பல முக்கியமான விஷயங்கள் தெரிய வந்துள்ளது.

ஹூரான் இந்தியா

ஹூரான் இந்தியா

சமீபத்தில் ஹூரான் இந்தியா அமைப்பு இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் எப்படி, எதில் முதலீடு செய்கிறார்கள் என்றும், அவர்களுக்குப் பிடித்தமான பிராண்டுகள் பற்றியும் ஆய்வு செய்து ஆய்வறிக்கை வெளியிட்டு இருந்தது. தற்போது நைட் ஃபிராங்க் அமைப்பும் வெல்த் 2022 அறிக்கையில் பெரும் பணக்காரர்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

7 கோடி ரூபாய் டூ 210 கோடி ரூபாய்

7 கோடி ரூபாய் டூ 210 கோடி ரூபாய்

ஹை நெட் வொர்த் தனிநபர்கள் என்றால் குறைந்தது 1 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அல்லது 7 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உடையவர்கள். அல்ட்ரா ஹை நெட் வொர்த் தனிநபர்கள் என்றால் 30 மில்லியன் டாலர் அதாவது 210 கோடி ரூபாய்க்கும் அதிகச் சொத்து மதிப்பு வைத்துள்ளவர்கள்.

முக்கிய முதலீடுகள்

முக்கிய முதலீடுகள்

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் அதாவது அல்ட்ரா ஹை நெட் வொர்த் தனிநபர்கள் சராசரியாக அவர்களின் செல்வத்தில் 11 சதவீதத்தைப் பேரார்வம் சார்ந்த முதலீடுகளுக்கு ஒதுக்கியுள்ளனர். உதாரணமாக நகைகள், கிளாசிக் கார்கள் அல்லது ஆடம்பர ஹேண்ட்பேக் போன்றவற்றை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். இத்தகைய பொருட்களின் சிலவற்றின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உயர வாய்ப்பு உள்ளது.

ஒவியங்கள் மற்றும் கலை

ஒவியங்கள் மற்றும் கலை

கடந்த ஆண்டில் பெரும்பாலான இந்திய பெரும் பணக்காரர்கள் ஒவியங்கள்-ஐ முக்கிய முதலீடாக வைத்துள்ளனர் என இவ்வறிக்கை கூறுகிறது. ஓவியங்களைத் தொடர்ந்து இந்தியாவின் பணக்காரர்கள் அதிகம் முதலீடு செய்து கைப்பற்றிய சொத்துக்கள் பட்டியலில் நகைகள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.

ஓவியங்கள் மீது முதலீடு

ஓவியங்கள் மீது முதலீடு

ஓவியங்கள், நகைகளைத் தொடர்ந்து கிளாசிக் கார்கள், வாட்சு மற்றும் சொகுசு ஹேண்ட் பேக் ஆகியவற்றில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். நைட் ஃபிராங்கின் ஆய்வுகள் படி ஓவியங்களின் மீதான முதலீட்டின் மதிப்பு 12 மாத காலத்தில் 13 சதவீதமும், 10 ஆண்டுகளில் 75% கூடுதலான வருமானமும் அளிக்கிறது.

ஒயின் மற்றும் விஸ்கி

ஒயின் மற்றும் விஸ்கி

டாப் ஐந்து இடங்களுக்குள் வரவில்லை என்றாலும், ஒயின்கள் மற்றும் அரிய வகை விஸ்கிகள் பல பணக்கார இந்தியர்களால் விரும்பப்பட்ட முதலீடாக உள்ளது. ஒயின் முதலீடுகளில் 16 சதவீதமும், அரிய வகை விஸ்கியின் மதிப்பு 9 சதவீதம் லாபத்தையும் அளிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+