தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தில் JABIL நிறுவனத்துடனான 2000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம், திருச்சியின் அடையாளத்தையே மாற்றப்போகிறது என்று பேசப்பட்டு வரும் வேளையில், இந்த தொழிற்சாலை எந்த இடத்தில் அமைக்கப்படப்போகிறது என்பது முக்கியமான கேள்வியாக தற்போது உள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான ஜாபில் இன்க், திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டது, இந்த தொழிற்சாலை திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள மணப்பறை சிப்காட்-ல் விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப்படுவதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பூங்காவில் ஜாபில் இன்க் நிறுவனத்திற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருக்கும் வேளையில் உள்ளது. ஆப்பிள், சிஸ்கோ, HP மற்றும் டெல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்களை வழங்கும் இந்த ஜாபில் நிறுவனம், திருச்சியில் சுமார் ரூ.2000 கோடி முதலீட்டில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க சுமார் 70 ஏக்கர் நிலம் தேடுகிறது.
அமெரிக்க நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டால், மணப்பறையில் உள்ள சிப்காட் தொழில்துறை பூங்காவில் முதல் பன்னாட்டு மற்றும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாக இது இருக்கும். இந்த முதலீட்டின் வாயிலாக இப்பகுதியில் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் தொழில்துறை பூங்கா அமைக்க 2013 இல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவின் பெயரில் உருவானது. இந்த தொழிற்பூங்காவிற்கான நிலத்தை மலிவான விலையில் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான நோக்கத்துடன் இந்த சிப்காட் உருவானது.
நிலம் கையகப்படுத்தும் நீண்ட செயல்முறையின் பின்னர், மணப்பறை சிப்காட் உருவாக்க கண்ணுடையன்பட்டி, கே. பெரியப்பட்டி மற்றும் சத்திரப்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 1,096.36 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி சிப்காட் தொழில்துறை பூங்கா உருவாக்கப்பட்டது.
பின்னர் இது தொழில்துறை அமைக்கும் நிறுவனங்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அனைத்து தேவையான வசதிகளையும் உருவாக்கியது. மணப்பாறை சிப்காட்டில் 2019 முதல் நிலம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியது.
இந்த 1,096 ஏக்கரில், தமிழ்நாடு அரசின் சிறு தொழில்துறை வளர்ச்சி கழகத்திற்கு (SIDCO) 131.92 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது. மணப்பறையின் சிப்காட் இதுவரை 13 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அவற்றில் ஐந்து நிறுவனங்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன மற்றும் எட்டு பொது பொறியியலில் ஈடுபட்டுள்ளன. இதுவரை சுமார் 80 ஏக்கர் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications