பல நூற்றாண்டுகளாக தங்கம் ஒரு பிரபலமான முதலீடாக இருந்து வருகிறது. பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும் தங்கத்தை விரும்பி வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறைவதே இல்லை. அதுவும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. இருந்தாலும் தங்க நகைகளில் தான் பலர் தங்களின் பெரும்பான்மையான முதலீட்டை செய்கின்றனர்.
ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,120-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் விலை 7,767 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் இந்தியாவை விடவும் விலை குறைவாக வேறு சில இடங்களில் நாம் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். அது எந்தெந்த நாடுகள் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

தங்க நகைகள் ஒரு முதலீடாக மட்டுமல்லாமல் அதன் கலாச்சார முக்கியத்துவத்திற்காகவும் நன்கு அறியப்பட்டது. இந்தியாவில் திருமணங்கள், வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள் என அனைத்திற்கும் அணிகலன்களாக பெண்களால் அணியப்படுகிறது. தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளிலும் தங்கம் அதிக அளவில் மக்களால் வாங்கப்படும். மேலும் இதன் காரணமாக உள்ளூர் சந்தையில் விலை உயர்வும் ஏற்படும்.
உலக அளவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் சிறந்த விலைகளில் எப்படி தங்க நகையை வாங்கலாம் என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். இந்தியாவை விட தங்கத்தின் விலை குறைவாக உள்ள 5 நாடுகளைப் பற்றிப் பார்ப்போம்.
இந்தோனேசியா: இந்தோனேசியாவில் நல்ல தரமான, அதே வேளையில் உலகிலேயே மலிவான விலையில் தங்கத்தை வாங்கலாம். இந்தோனேசியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,330,266 IDR (இந்தோனேசிய ரூபியா). இது இந்திய மதிப்பில் சுமார் 71,880 ரூபாய். இந்தியாவில் இதே தரமான தங்கத்தின் விலை அக்டோபர் 12-ஆம் தேதி நிலவரப்படி 10 கிராம் 77,700 ரூபாய். இந்தோனேசியாவில் தங்கம் வாங்கும் போது 5,820 வரை சேமிக்கலாம்.
மலாவி: கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1,482,660.70 MWK (மலாவியன் குவாச்சா). இது இந்திய மதிப்பில் 7,230 ரூபாய்க்கு சமம். இது இந்தியாவின் விலையை விட 5,670 ரூபாய் குறைவாகும்.
ஹாங்காங்: ஹாங்காங்கில் 10 கிராம், 24 கேரட் தங்கம் விலை HKD 665-ஆக உள்ளது. அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.72,050. இந்தியாவில் விற்கப்படும் 77,700 ரூபாய் விலையோடு ஒப்பிடுகையில் ஹாங்காங்கில் 5,650 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
கம்போடியா: கம்போடியாவிலும் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும். அக்டோபர் 12-ஆம் தேதி நிலவரப்படி கம்போடியாவில் தங்கத்தின் விலை 347,378.43 KHR (கம்போடியன் ரியல்). அதாவது இந்திய மதிப்புக்கு 10 கிராம் ரூ.72,060. இது ரூ.77,700 ஒப்பிடுகையில் மிகக் குறைவு.
துபாய்: யாரேனும் உறவினர்கள் துபாய்க்கு சென்றிருந்தால் வரும்போது தங்க நகைகளை வாங்கி வரச் சொல்வது தான் நம் நாட்டு மக்களின் பொதுவான கோரிக்கை. ஏனெனில் துபாயில் விலை குறைவாகவும், தரமாகவும் தங்க நகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதற்கு சான்றாய் துபாயில் 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை AED 3180.25 ஆக உள்ளது. அதாவது இந்திய மதிப்புக்கு ரூ.72,840. இந்தியாவில் விற்பனையாகும் 10 கிராம் விலையோடு ஒப்பிடுகையில் துபாயில் ரூ.4,860 வரை விலை குறைவு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications