குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்.. 10 மோசமான நாடுகள் எது எது..இந்தியாவுக்கு எந்த இடம்?

உலக பட்டினி அறிக்கையின் படி மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது.

முன்னதாக 94வது இடத்தில் இருந்த இந்தியா 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் (The Global junger index) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடம் கிடைத்துள்ளது.

பசி தீவிரமான நாடுகளில் இந்தியா

பசி தீவிரமான நாடுகளில் இந்தியா

இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், பசி தீவிரமான நாடுகள் என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது தான். கடந்த ஆண்டு 107 நாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில் இந்தியா 94வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு மொத்த எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு பின்னர் பார்க்கும்போது 15 நாடுகளே மோசமான நாடுகளாக உள்ளன.

 கவலையளிக்கும் விஷயம்

கவலையளிக்கும் விஷயம்

இதில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கூட 92வது இடத்திலும், நேபாளம் 76வது இடத்திலும் உள்ளன. பங்களாதேஷினை காட்டிலும் இந்தியா மோசமான பின் தங்கியுள்ளது. இதில் மற்றொரு கவலையளிக்க கூடிய, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், தற்போதைய கணிப்பின் படி, 47 நாடுகள் 2030-க்குள் குறைந்தபட்ச பசியை பூர்த்தி செய்ய கூட தவறிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது தான்.

இந்தியாவின் மோசமான நிலை

இந்தியாவின் மோசமான நிலை

இந்தியா மற்ற உலக நாடுகளை காட்டிலும் தற்போதைய மந்த நிலையை காட்டிலும் வலுவாக காணப்படும் நிலையில், வளர்ந்து வரும் மிகப்பெரிய நாடாக உள்ளது. இது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் பசியால் வாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயம் எனலாம்.

அண்டை நாடுகளின் நிலை?

அண்டை நாடுகளின் நிலை?

சொல்லப்போனால் ஆசிய கண்டத்திலேயே இந்த பட்டியலில் இந்தியாவினை விட மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளது. அதுவும் 109வது இடத்தில் உள்ளது. இந்தியாவினை விட பொருளாதாரத்தின் பின் தங்கிய நாடுகளான பாகிஸ்தான், இலங்கை கூட இந்தியாவினை விட முன்னணியில் உள்ளன.

டாப் 10 நாடுகள்

டாப் 10 நாடுகள்

கீழ் கண்ட நாடுகள் GLOBAL HUNGER INDEX SCORES BY 2022ன் படி எடுக்கப்பட்ட, முதல் 10 நாடுகளாகும். இவற்றின் இன்டெக்ஸ் விகிதங்கள் 5-க்கு மேலாக காணப்படுகின்றது.

பெலாரஸ்

போஸ்னியா & ஹெர்சகோவினா

சிலி

சீனா

குரோஷியா

எஸ்டோனியா

ஹங்கேரி

குவைத்

லாட்வியா

லிதுவேனியா

10 மோசமான நாடுகள்

10 மோசமான நாடுகள்


கீழ் கண்ட நாடுகள் GLOBAL HUNGER INDEX SCORES BY 2022ன் படி எடுக்கப்பட்ட, கடைசி 10 நாடுகள். இவற்றின் இன்டெக்ஸ் விகிதங்கள் 5% மேலாக காணப்படுகின்றது.

107வது இடம் - இந்தியா - 29.1

108 ஜாம்பியா - 29.3

109 ஆப்கானிஸ்தான் - 29.9

110 திமோர்-லெஸ்டே - 30.6

111 கினியா-பிசாவ் - 30.8

112 சியரா லியோன் - 31.5

113 லெசோதோ - 32.4

113 லைபீரியா - 32.4

115 நைஜர் - 32.6

116 ஹைட்டி - 32.7

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+