இந்தியாவின் சிறந்த தொலைத் தொடர்பு நிறுவனம் எது தெரியுமா? இந்திய டெலிகாம் துறையில் நிலவி வரும் கடுமையான போட்டிக்கு மத்தியில், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா லிமிடெட், ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சிறப்பான சேவையினை வழங்கி வருகின்றன.
எனினும் ஜியோவின் வருகைக்கு பிற மற்ற டெலிகாம் நிறுவனங்கள் பெரும் ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது. எப்படியிருப்பினும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களது இடங்களை விட்டுக் கொடுக்காமல் போராடி வருகின்றன.
இப்படி ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. அதில் எது சிறந்த நிறுவனம்? முன்னணி பிராண்டு எது? வாருங்கள் பார்க்கலாம்.
டெலிகாமில் யார் பெஸ்ட்?
இந்த நிறுவனம் தொடங்கிய சிறிது காலத்திலேயே, TRA, டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி என்று அழைக்கப்படும் அமைப்பு, இந்தியாவின் மிக விரும்பப்படும் பிராண்ட் 2022 என்ற ஆய்வினை நடத்தியது.
இந்த ஆய்வில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. ஜியோவைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
ஆடைகளில் யார் பெஸ்ட்?
ஆடை வணிகத்தில் அடிடாஸ் சிறந்த பிராண்டாக இருந்தது. அதனை தொடர்ந்து நைக், ரேமண்ட், ஆலன் சோலி மற்றும் பீட்டர் இங்கிலாந்து உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பட்டியலில் அடங்கும்.
எந்த ஆட்டோமொபைல் பெஸ்ட்?
ஆட்டோமொபைல் நிறுவனத்தில் முதலிடம் பிடித்திருப்பது பி எம் டபள்யூ தான். அதனைத் தொடர்ந்து டொயோட்டா, ஹூண்டாய் மற்றும் ஹோண்டா உள்ளிட்ட பிராண்டுகள் இடம்பெற்றுள்ளன.
நிதி சேவையில் எது பெஸ்ட்?
இதே நிதி சேவைகளில் எல்ஐசி முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் ஐசிஐசிஐ வங்கியும் இடம் பெற்றுள்ளது.
நுகர்வோர் பொருட்களில் எது?
மக்கள் அதிகம் பயன்படுத்தும் நுகர்வோர் பொருட்களில் கென்ட் முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் லுவ்புரே, அடுத்த இடத்தில் ஓகாயா உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். இதனை தாண்டி கன்சியூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் எல்ஜி, சோனி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் டாப் மூன்று பிராண்டுகளாக உள்ளன.
பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனம்
பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவன பட்டியலில் ஐடிசி முதலிடத்திலும், டாடா மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
இதே எரிசக்தி பொருட்கள் பட்டியலில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அதானி உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்
ஃபுட் பேவரேஜ் & எஃப்எம்சிஜி நிறுவனங்கள்
ஃபுட் பேவரேஜ் நிறுவனத்தில் அமுல் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து நெஸ்கேஃபை அடுத்த இடத்திலும் உள்ளது.
ஃபோக் அடுத்த சிறந்த எஃப் எம் சி ஜி நிறுவனமாகவும் உள்ளது. இதே லாக்மி, நிவியா மற்றும் கோல்கேட் உள்ளிட்ட நிறுவனங்களும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
எலக்ட்ரானிக் பொருட்கள்
இதே வேகமாக நுகரும் எலக்ட்ரிகல் பொருட்கள் பட்டியலில் பிலிப்ஸ் முதலிடத்திலும், கேஜெட்ரி பட்டியலில் Mi முதலிடத்திலும், ஹெல்த்கேரில் ஹிமாலயா முதலிடத்திலும், ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் ஐடிசி ஹோட்டல்கள் முன்னணி நிறுவனங்களாக உள்ளன.
உற்பத்தியில் யார் பெஸ்ட்?
இதே உற்பத்தில் ஏசிசி சிமெண்ட் நிறுவனம் முதலிடத்திலும், இதே சில்லறை விற்பனையில் கேஎஃப்சியும், தொழில் நுட்ப துறையில் டெல் நிறுவனமும் முன்னிலையில் உள்ளன.
அமேசான், பேஸ்புக், பிளிப்கார்ட் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைய பிராண்டுகளில் முதலிடத்தில் உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications