இந்தியாவின் பிரபல சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக மும்பை உள்ளது. இந்தியாவின் நிதியியல் தலைநகரமாகவும், பல முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களின் பிறப்பிடமாக இருக்கும் மும்பை இந்தியாவின் காஸ்ட்லியான நகரமாக உள்ளது.
EMI மற்றும் மக்களின் வருமான விகிதத்தின் அடிப்படையில் நைட் ஃபிராங்க் முக்கியமான ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆய்வின் படி இந்தியாவின் நிதி தலைநகரமாக இகுக்கும் மும்பை தான் காஸ்ட்லியான சந்தையாக இருப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் மிக விலையுயர்ந்த வீட்டுச் சந்தை என பெயரை பெற்றுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நகரத்தில் உள்ள ஒரு சராசரி குடும்பத்தின் மொத்த வருமானத்திற்கு வீட்டுக் கடனுக்கான EMIகளின் விகிதத்தின் அடிப்படையில் வாழ்க்கை மலிவு விலை அளவுகள் (living affordability) மதிப்பீடு செய்யப்படுகிறது.
உதாரணமாக, 40 சதவீத வாழ்க்கை மலிவு விலை குறியீட்டைக் கொண்ட ஒரு நகரத்தில் சராசரியாக, அந்த நகரத்தில் உள்ள குடும்பங்கள், வீட்டுக் கடனுக்கான EMI-யை ஈடுகட்ட தங்கள் வருமானத்தில் 40 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்பதை தான் இந்த கணக்கீடு குறிக்கிறது.

இதன்படி பார்த்தால் மும்பை ஹோம் லோன் EMI டூ income ratio அளவு 55 சதவீதம், இதன் மூலம் நகரத்தில் உள்ள குடும்பங்கள் வீட்டுக் கடனுக்கான EMI-க்கு தங்களுடைய வருமானத்தில் சுமார் 55 சதவீதத்தை செலுத்துகின்றனர். மும்பை முதல் இடத்தை பிடித்த நிலையில் மற்ற நகரங்களின் நிலவரம் என்ன..?
ஹைதராபாத் நகரில் 31 சதவீதமும், டெல்லி என்சிஆர் பகுதியில் 30 சதவீமும், பெங்களூர் மற்றும் சென்னையில் 28 சதவீதமும், புனே மற்றும் கொல்கத்தாவில் 26 சதவீதமாக உள்ளது. இப்போ இந்தியாவில் மலிவான வீடுகளை வாங்க சரியான இடம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் 23 சதவீதத்துடன் most affordable place என்ற தகுதியை பெற்றுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications