உலகிலேயே இந்தியாவில் தான் அதிக வருமான வரி வசூலிக்கப்படுகிறதா? உண்மை என்ன..?

உலகிலேயே இந்தியாவில் தான் அதிகபட்ச வருமான வரி விதிக்கப்படுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் குறைந்தபட்சமாக 5 சதவீதத்திலிருந்து அதிகபட்சமாக 30 சதவீதம் வரை வருமான வரி வசூல் செய்யப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும்.

மிண்ட் தளம் பல்வேறு நாடுகளிலும் எவ்வளவு வருமான வரி வசூல் செய்யப்படுகிறது என்ற தகவலை விரிவான ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது. Purchase price parity எனப்படும் ஒவ்வொரு நாட்டு பணத்திற்கும் உள்ள பொருட்களை வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கீடு வெளியாகி உள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் அதிக வருமான வரி வசூலிக்கப்படுகிறதா? உண்மை என்ன..?



அனைத்து நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கு குறிப்பிட்ட வரி என வருமான வரி பிடிக்கிறது. இந்தியாவில் 0%, 5%, 10%, 15%, 20%, 30% என ஆறு விகிதங்களில் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது.

மிண்ட் வெளியிட்டுள்ள செய்தியின் படி ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் தான் அதிகபட்சமாக 55 சதவீதம் வரி பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் புதிய வரி முறையில் அதிகபட்சம் 39 சதவீதமும், பழைய வரி முறையில் 42.7 சதவீதமும் வருமான வரி செலுத்த வேண்டும். இதில் செஸ் வரிகளும் உள்ளடங்கும். அமெரிக்காவில் 1 லட்சம் டாலரை , அதன் பொருட்கள் வாங்கும் திறனுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் 20 லட்சம் ரூபாய்.

மிண்ட் தளம் இவ்வாறு அந்தந்த நாட்டு நாணயங்களின் பொருட்கள் வாங்கும் சக்தியை கொண்டு ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானத்தை அளவாக கொண்டு கணக்கீடு செய்துள்ளது. இதன்படி, உலகிலேயே அதிகபட்சமாக பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் தான் வருமான வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. இங்கு அதிகபட்சமாக 45 சதவீதம் வருமான வரி வசூல் செய்யப்படுகிறது.

ஜெர்மனியில் ஆண்டுக்கு இதே அளவுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் 42 சதவீத வருமான வரி செலுத்துகின்றனர். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ஆண்டுக்கு இதே அளவுக்கு வருமானம் ஈட்டுபவர்கள் 35 லிருந்து 40% வரை வருமான வரி செலுத்துகின்றனர். அதே வேளையில் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தான் அதிகபட்சம் வருமான வரி பிடிக்கப்படுகிறது.

இந்தியாவின் 50 லட்சம் ரூபாய் என்பது சிங்கப்பூரில் 0.19 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு நிகரானது. சிங்கப்பூரில் இந்த வருமானத்திற்கு 18% வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ஜப்பானின் இதே அளவு வருமானத்திற்கு 10% வரி பிடிக்கப்படுகிறது. சீனாவில் 35 சதவீதம் என வரி வசூல் செய்யப்படுகிறது.

இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக 30 சதவீதம் என வருமான வரி வசூல் செய்யப்படுகிறது. அதிலும் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வருமானத்திற்கு தான் இந்த வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதை பணவீக்க அடிப்படையில் சரி செய்து பார்க்கும்போது தற்போதைக்கு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வருமானத்திற்கு மட்டுமே 30 சதவீதம் வரி பிடித்தம் செய்ய வேண்டும்.

இந்தியாவில் அரசு பணவீக்க அடிப்படையில் வருமானவரி விகிதங்களை மாற்றாமல் இருப்பது தான் பிரச்சனை என சொல்லப்படுகிறது. அது தவிர பழைய வருமான வரி தாக்கல் நடைமுறையில் பிரிவு 80சி இன் கீழ் குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் மற்றும் பிற சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இது 2014 ஆம் ஆண்டிலிருந்து மாற்றப்படாமலேயே இருக்கிறது.

அதேபோல நிலையான நிலையான வரி விலக்கு 50000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டிலிருந்து மாற்றப்படாமலே இருக்கிறது . அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை தான் தற்போது முன்வைக்கப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றமடைந்த பொருளாதார நாடுகளும் ஆண்டுதோறும் தங்களுடைய வருமான வரி விகிதங்களை பணவீக்க அடிப்படையில் மாற்றி அமைக்கின்றன. அதை அரசு கொண்டு வந்தாலே போதும் என சொல்லப்படுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+