டிஜிட்டல் கரன்சிகள் எனப்படும் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் சமீபத்திய ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது. எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இன்றளவிலும் கிரிப்டோகரன்சி குறித்தான மசோதா உருவாக்கப்படும். இந்தியா சொந்தமாக அதன் டிஜிட்டல் கரன்சியினை வெளியிடும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிரந்தமாக இந்த டிஜிட்டல் கரன்சிகளில் முதலீடு செய்ய முடியுமா? என்ற சந்தேகமும் இருந்து வருகின்றது
அது சரி உலக நாடுகளில் எந்த நாடு அதிக டிஜிட்டல் கரன்சியினை வைத்துள்ளது? எந்த நாட்டின் வசம் அதிகம் உள்ளது? இந்தியாவின் வசம் எவ்வளவு உள்ளது?
உக்ரைன் தான் டாப்
இதில் உக்ரைன் மக்களின் வசம் 12.7% இருப்பதாகவும், இதன் மூலம் அதிக டிஜிட்டல் கரன்சிகளை வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது.
இதே இரண்டாவது இடத்தில் வெனிசுலா மக்கள் 10.3%மும், சிங்கப்பூரில் 9.4%மும், கென்யா வசம் 8.5%மும், அமெரிக்காவில் 8.3%ம் மக்களும் வைத்துள்ளனர்.
இந்தியா வசம்
கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்த கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது பெரியளவில் ஏற்றம் கண்டது. UN அறிக்கையின் படி இந்திய மக்களின் வசம் 7% மேலாக கிரிப்டோகரன்சிகள் உள்ளது.
2021ம் ஆண்டில் கிரிப்டோகரன்சி வைத்திருக்கும் மக்கள் தொகையின் பங்கினை பொறுத்தவைரை, வளரும் நாடுகள் மொத்தம் 20 நாடுகளில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் ஐ நா வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.
வளரும் நாடுகளில் அதிகரிக்கும் மோகம்
இந்த டிஜிட்டல் கரன்சிகள் பணம் அனுப்புவதற்கும், பெறுவதற்கும் வசதியாக இருந்தலும், இதில் பிரச்சனைகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. ஆக இவை நிலையற்ற டிஜிட்டல் சொத்துக்களாகவே பார்க்கப்படுகிறது. எனினும் வளர்ந்து வரும் நாடுகளில் கிரிப்டோகரன்சிகளை ஆதரிப்பதற்காக காரணிகளை ஆராய்ந்து வருகின்றன. குறிப்பாக இது எளிதான பரிவர்த்தனை, பணவீக்கத்துக்கு எதிரான என பல காரணிகளை முன் வைக்கின்றன.
கடுமையாகலாம்
எனினும் சமீபத்திய சரிவினால் சந்தையில் அபாயம் இருப்பதாக முதலீட்டாளர்கள் சற்றே பின் வாங்க தொடங்கியுள்ளனர். மேலும் இந்தியாவில் மத்திய அரசுகள் இன்னும் கிரிப்டோகரன்சிகள் குறித்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம்,. இது கிரிப்டோகரன்சிகள் இருப்பினை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications