எந்த நாட்டில் பணக்காரங்க அதிகமா இருக்காங்க.. இந்தியாவில் நிலவரம் எப்படி தெரியுமா?

போர்ப்ஸ் 2023 உலக பணக்காரர்கள் பட்டியலில் எத்தனை இந்திய பணக்காரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? உலக நாடுகளில் எத்தனை பில்லியனர்கள், எந்த நாட்டில் எவ்வளவு பணக்காரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? எந்த நாட்டில் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள்?

உலகில் மொத்தம் 2640 பில்லியனர்கள் 77 நாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர் என போர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது .

எந்த நாட்டில் பணக்காரங்க அதிகமா இருக்காங்க..  இந்தியாவில் நிலவரம் எப்படி தெரியுமா?

ஆச்சரியமளிக்கும் வகையில் அமெரிக்கா தான் அதிக பில்லியனர்களை கொண்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 735 பில்லியனர்கள் உள்ளனர்.

பிரான்சை சேர்ந்த அர்னால்ட் பெர்னார்ட் முதலிடத்தில் உள்ளார். அதன் பிறகு எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸ் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

எந்த நாட்டில் பணக்காரங்க அதிகமா இருக்காங்க..  இந்தியாவில் நிலவரம் எப்படி தெரியுமா?

இந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் புதியதாக பில்லியனர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

எந்த நாட்டில் பணக்காரங்க அதிகமா இருக்காங்க..  இந்தியாவில் நிலவரம் எப்படி தெரியுமா?

அமெரிக்காவினை அடுத்து சீனா பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவில் மட்டும் 495 பில்லியனர்கள் உள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 539 ஆக இருந்தது. ஆக நடப்பு ஆண்டில் இது கணிசமாக குறைந்துள்ளது.

மூன்றாவது இடத்தில் இந்தியா 169 பில்லியனர்களுடன் உள்ளது. எனினும் முந்தைய இரண்டு பில்லியனர்களுடன் ஒப்பிடும்போது பாதி கூட இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த நிகர மதிப்பு 675 பில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டினை காட்டிலும் 75 பில்லியன் டாலராகும், ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு மட்டும் பில்லியனர் கெளதம் அதானி 43 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இதுவே மிகப்பெரிய வீழ்ச்சிக்கு காரணமாகும்.

இந்தியாவினை தொடர்ந்து அடுத்த 4வது இடத்தில் ஜெர்மனி 126 பில்லியனர்களுடன் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 134 பில்லியனர்களாக இருந்தனர்.

ரஷ்யாவில் 105 பில்லியனர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. இதன் மொத்த நெட்வொர்த் 474 பில்லியன் டாலராகும்.

இந்த விகிதமானது அடுத்த ஆண்டில் இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க நிலவி வரும் வங்கி நெருக்கடி, ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், அரசியல் பதற்றங்கள் என பலவும் இன்னும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பல பில்லியனர்களின் சொத்து மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+