வரும் வாரத்தில் வங்கியில் முக்கியமான வேலை இருக்கிறதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான். அடுத்த வாரம் (ஏப்ரல் 13 - 19) நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைகள் மற்றும் விசேஷ தினங்களை முன்னிட்டு வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வரவுள்ளது.
அம்பேத்கர் ஜெயந்தி, போஹேலா பைஷாக் மற்றும் பிஹு போன்ற பண்டிகைகளால் சில மாநிலங்களில் 4 நாட்கள் வரை வங்கிகள் இயங்காது. உங்கள் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், வீணாக வங்கிக்கு சென்று அலையாமல் இருக்கவும் முழுமையான விடுமுறை பட்டியலை இப்போதே பார்த்து உஷாராகி விடுங்கள்.

ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 19 வரை இந்தியாவிலுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு 4 நாட்கள் வரை மூடப்பட வாய்ப்புள்ளது. அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு எனத் தொடர் விடுமுறைகள் வருவதால், வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
விடுமுறை நாட்களின் முழு விவரங்கள்!
ரிசர்வ் வங்கி (RBI) காலண்டர் படி அடுத்த வார விடுமுறை பட்டியல் இதோ:
ஏப்ரல் 14 (செவ்வாய்): அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு, விஷு புண்ணியகாலம், வைசாகி, போஹாக் பிஹு போன்ற பண்டிகைகளுக்காக சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, அகர்தலா, அகமதாபாத், பெலாபூர், புவனேஸ்வர், டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, ராஞ்சி, திருவனந்தபுரம், விஜயவாடா உட்பட இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் வங்கிகள் இயங்காது. ஆக வங்கிகளுக்கு செல்லும் முன்பு இதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த நாளில் வங்கி வேலைகள் இருந்தால் முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
ஏப்ரல் 15 (புதன்): போஹேலா பைசாக் (பெங்காலி புத்தாண்டு), ஹிமாச்சல் தினம் மற்றும் பிஹு பண்டிகையை முன்னிட்டு, அகர்தலா, பெலாபூர், புவனேஸ்வர், சென்னை, டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், இட்டாநகர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை.
ஏப்ரல் 16 (வியாழன்): போஹாக் பிஹு பண்டிகையை முன்னிட்டு இட்டாநகர், கொச்சி, திருவனந்தபுரம், கொல்கத்தா போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கலாம்.
ஏப்ரல் 19 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஏப்ரல் 18 சனிக்கிழமை மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை என்பதால், அன்று வங்கிகள் வழக்கம்போல செயல்படும்.
வங்கி கிளைகள் மூடப்பட்டு இருந்தாலும், உங்கள் அவசரத் தேவைகளுக்கு, ATM சேவைகள் மூலம் பணம் எடுக்கவும், பேலன்ஸ் செக் செய்யவும் ஏடிஎம்கள் எப்போதும் போல செயல்படும்.
ஆன்லைன் பேங்கிங்: மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் மூலம் பணப் பரிமாற்றம் (IMPS, NEFT, RTGS) செய்யலாம்.
டிஜிட்டல் பரிவர்த்தனை: UPI (GPay, PhonePe) மூலம் வழக்கம்போல பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.
இருப்பினும், காசோலை (Cheque) மூலம் பணம் செலுத்துவது, பெறுவது, மேலாளரை நேரில் சந்திப்பது போன்ற பணிகளுக்கு வங்கி விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் செல்லலாம். இருப்பினும் மாநிலத்திற்கு மாநிலம் விடுமுறை நாட்கள் மாறுபடும் என்பதால், உங்கள் உள்ளூர் வங்கி கிளையை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications