வேலை நிமித்தமாக இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். 10 முதல் 15 ஆண்டுகாலம் வெளிநாட்டிலேயே தங்கி இருந்து வேலை பார்த்துவிட்டு ஒரு கணிசமான தொகையை சம்பாதித்த பிறகு மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என எண்ணுகின்றனர்.
வெளிநாடு சென்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தவர்கள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்றால் எந்த நகரம் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை வழங்கும் என்பதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நபர் 17 ஆண்டுகளாக கனடா நாட்டில் வசிக்கிறார். தற்போது தான் இந்தியா திரும்ப விரும்புவதாக தெரிவித்திருக்கிறார் . நான் இந்தியாவிற்கு திரும்பினால் எந்த நகரம் எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாகவும் ரிமோட் முறையில் தன்னுடைய நிறுவனம் வேலை செய்ய அனுமதி வழங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு மூன்று லட்சம் டாலர்கள் சம்பளமாக கிடைக்கிறதாம். இந்தியாவில் பசுமை நிறைந்த மற்றும் அமைதியான அதே வேளையில் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வழங்கும் நகரமாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
தன்னுடைய சொந்த ஊரான கொல்கத்தாவில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் அந்த நகரம் வேண்டாம், கொச்சி மற்றும் மைசூருக்கு நான் சென்றிருக்கிறேன், இந்த இரண்டு நகரங்களில் எது எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு ஒரு பயனர் கொச்சி பசுமை நிறைந்த நகரம் ஆனால் கல்வி நீங்கள் எதிர்பார்ப்பதை போல இருக்குமா என்பது சந்தேகம் என கூறியுள்ளார். மைசூர் கலாச்சார , வரலாற்று ரீதியாக சிறந்த நகரம் ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
ஒரு பயனர் கிழக்கு இந்திய மாநிலங்களில் மலை பாங்கான பகுதிகள் நீங்கள் கேட்கக்கூடிய அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய இடமாக இருக்கும் ,இங்கே உங்களுக்கு காற்று மாசு இருக்காது கல்வி வசதிகளும் இங்கு சிறப்பாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். ஒரு பயனர் கொச்சினுக்கு சென்றால் உங்கள் பிள்ளைகள் மலையாளம் படிக்க வேண்டியது இருக்கும், மைசூருக்கு சென்றால் கனடா மொழி படிக்க வேண்டியிருக்கும் அது உங்களுக்கு சரி என்றால் இந்த நகரங்களை தேர்ந்தெடுங்கள் என கூறியுள்ளார்.
ஒரு நபர் பெங்களூரு தான் சிறந்த நகரம் என கூறி இருக்கிறார். உங்கள் குழந்தைகள் பெரிய பிள்ளைகளாகும் போது அவர்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கு நகரமாக இருக்கும் என்பதால் பெங்களூருவை தேர்ந்தெடுக்கலாம் , இங்கே சர்வதேச தரத்திலான பள்ளிகள் இருக்கிறது என்பதால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்த்தபோது பெங்களூரு நகரம் சிறந்த முடிவாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். பெங்களூரிலேயே சற்று புறநகர் பகுதிகளில் வீட்டினை பார்த்து கொள்ளலாம் என அறிவுரை வழங்கியுள்ளார். நீங்கள் எந்த இந்திய நகரம் அமைதியான வாழ்க்கையை தரும் என நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications