டெல்லி: இந்தியாவின் பெரு நகரங்களான பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்டவை தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து இருந்தாலும் வாழ்க்கை தரம் இந்த நகரங்களில் எல்லாம் மோசமாகிவிட்டது. இந்நிலையில் இந்தியாவின் சிறந்த நகரம் எது என்ற விவாதம் சமூகவலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது.
இந்தியாவின் நிதி தலைநகராக மும்பை கருதப்படுகிறது. ஆனால் இங்கே ரியல் எஸ்டேட் மதிப்பை கேட்டால் தலையே சுற்றி விடும். இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம், ஐடி மையம் என பெயர் பெற்றுள்ளது பெங்களூரு. ஆனால் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தீராத ஒன்றாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு இங்கே கடுமையான தண்ணீர் பிரச்சினையும் நிலவி வந்தது. அடுத்ததாக தலைநகரான டெல்லி. இங்கே தற்போது காற்றுமாசு பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது.
காற்றின் தரக் குறியீடு மிக மோசமடைந்து மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக டெல்லி மாறி வருகிறது. இப்படி இந்தியாவின் பிரதான நகரங்களில் எல்லாம் ஒரு பிரச்சனை தீராததாக இருக்கிறது.
இந்த நிலையில் எக்ஸ் பயனர் ஒருவர் இந்தியாவின் கனவு நகரம் என்ற பெயரில் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது. மும்பை மக்கள், டெல்லி உள்கட்டமைப்பு, பெங்களூரு காலநிலை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த ஒரு நகரம்தான் இந்தியர்களின் கனவு நகரம் என பதிவு செய்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு பலரது பார்வைகளையும் பெற்றுள்ளது. இந்த பதிவின் கீழ் பலரும் இந்தியாவின் சிறந்த நகரம் எது என்ற விவாதத்தை தொடங்கியுள்ளனர். சிலர் மும்பை மக்கள் கொண்ட ஒரு நகரம் என்ற பார்வையை வரவேற்றுள்ளனர். ஒரு சிலர் பெங்களூருவின் காலநிலை என்ற பார்வையை பார்வையை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் இதில் ஹைதராபாத்தின் உணவை சேர்த்துக் கொள்ளலாமே என பதிவு செய்துள்ளனர்.
பலரும் தங்கள் நகரங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்து பதிவினை வெளியிட்டுள்ளனர். ஒரு பயனரோ டெல்லியின் காற்று மாசு நிலையை சுட்டிக்காட்டி பதிவு டெல்லியை விட பெங்களூருவில் இருக்கும் காற்று சுவாசிக்க ஏதுவானது எனக் கூறியுள்ளார்.
ஏனெனில் பெங்களூருவில் காற்றின் தர குறியீடு 100க்கும் கீழ் இருக்கிறது. எனவே தலைநகர் டெல்லியில் வசித்துக்கொண்டு மாசடைந்த காற்றை சுவாசித்து யோகாசனம் செய்து கொண்டிருப்பதை விட பெங்களூரில் இருந்தால் அது நம்முடைய நுரையீரலுக்கு இன்னும் நல்லது என ஒரு பயனர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications