சமுக ஊடகத்தில் சினிமா நடிகை, நடிகர்கள் குறித்து பேசுவது மட்டும் அல்லாமல் வாழ்வில் முக்கியமான விஷயங்களும் விவாதிக்கப்படுகிறது, அப்படி டிவிட்டரில் தற்போது அரசு வேலை மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் எது சிறந்தது என்பதை தாண்டி சம்பள அளவீட்டில் எந்த வேலை சிறந்தது என்ற விவாதம் சூடுப்பிடித்துள்ளது.
ஒருவரின் வாழ்வில் வெற்றி என்பது அவர் தேர்வு செய்யும் வேலையின் அடிப்படையில் மாறுப்படுகிறது, அந்த வகையில் அரசு வேலையா, தனியார் வேலையா என்பதை தாண்டி 7 லட்சம் சம்பளம் கொடுக்கும் அரசு வேலை, 50 லட்சம் சம்பளம் கொடுக்கும் தனியார் வேலை எது பெஸ்ட் என்று டிவிட்டரில் ஆயுஷி மிஸ்ரா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்த பதிவு ஜூலை 19 ஆம் தேதி பதிவிடப்பட்ட நிலையில் இப்போது வரையில் சுமார் 6.14 லட்சம் பேர் பார்த்துள்ளது மட்டும் அல்லாமல் 100க்கும் அதிகமானோர் ரிப்ளை செய்ததன் மூலம் இணைய உலகில் ஆயுஷி மிஸ்ரா பலரின் கவனத்தை பெற்றுள்ளார். ஆயுஷி மிஸ்ரா டிஜிட்டல் மார்கெட்டர், கன்டென்ட் கிரியேட்டர், எஸ்ஈஓ ஆகியவற்றில் பணியாற்றுவதாக தனது டிவிட்டர் கணக்கில் பதவிட்டு உள்ளார்.
ஆயுஷி மிஸ்ரா-வின் பதிவுக்கு பலரும் பலவிதமாக பதில் அளித்தாலும், ஒரு சில பதில்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முக்கியமான விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. கரியர் மற்றும் நிதி தொடர்பான முடிவுகள் நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையை மாற்றக்கூடிய ஒன்றாக இருக்கும் காரணத்தால் மிகவும் தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த நிலையில் ஆயுஷி மிஸ்ரா-வின் ட்வீட்டுக்கு வந்த சில பதில்கள் உங்களுக்காக. நீங்கள் 40 - 45 வயதில் ரிட்டையர் ஆக வேண்டுமெனில் தனியார் துறை வேலை பெஸ்ட், இதுவே பேரன், பேத்திகள் உடன் ரிட்டயராக வேண்டுமெனில் 7 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் அரசு வேலை பெஸ்ட் என ஒரு டிவிட்டர்வாசி பதில் அளித்துள்ளார்.
மற்றொருவர் 7 லட்சம் கொடுக்கும் அரசு வேலை தான், 50 லட்சம் சம்பளம் கொடுக்கும் வேலைவாய்ப்பு எத்தனை வருடம் இருக்கும் என தெரியாது, இதனால் job security வேண்டுமெனில் அரசு வேலைதான் பெஸ்ட் என தெரிவித்தார். மற்றொருவர் எந்த வேலையாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்து அல்லது ரிமோட் மோட்-ல் வேலை செய்ய அனுமதி கிடைத்தால் போதுமானது என தெரிவித்துள்ளார்.
தனியார் வேலை இன்றைய காலக்கட்டத்திற்கு சிறப்பானதாக தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையிலும், தற்போது இந்தியா முழுவதும் எங்கு திரும்பினாலும் பணிநீக்க அறிவிப்புகள் வெளிவருவதை பார்க்கும் போது அரசு வேலை தான் பெஸ்ட் என தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க, மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications