இந்தியாவில் OTT தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நமது பொழுதுபோக்கு வழக்கங்களையே இவை மாற்றி அமைத்துவிட்டன என கூறலாம். சில இல்லங்களில் கேபிள் இணைப்பு கூட வாங்குவதை நிறுத்திவிட்டனர்.
வைஃபை இணைப்பு மற்றும் ஓடிடி தளங்களுக்கான சந்தா இருந்தால் போதும் நாள் முழுவதும் கூட தொடர்களையும் படங்களையும் நாம் கண்டு ரசிக்க முடிகிறது.

இந்தியாவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் , அமேசான் பிரைம் உள்ளிட்ட 55 ஓடிடி தளங்கள் இருக்கின்றன. சந்தாதாரர்கள் எண்ணிக்கை, வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஓடிடி தளம் முதலிடத்தில் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை ஓடிடி சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. Ormax வெளியிட்டுள்ள தரவுகளின் படி இந்தியாவில் 481 மில்லியன் ஓடிடி பயனாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் 101.8 மில்லியன் பேர் பணம் செலுத்தி சந்தா பெற்றிருப்பவர்கள். மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்கள் , ஓடிடி சந்தாதாரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களாக இருக்கின்றன.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney Plus Hotstar). 50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கருவிகளில் இந்த ஓடிடி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 2023 டிசம்பர் நிலவரப்படி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு 38.3 மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இந்த தளம் கடந்த 2022ஆம் ஆண்டிலேயே இந்திய ஓடிடி சந்தையில் 50% ஆக்கிரமிப்பு செய்துவிட்டது.
அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த செயலியும் 50 கோடி கருவிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 21 மில்லியன். 2022ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திய ஓடிடி சந்தையில் இது 9% இடத்தை பிடித்துவிட்டது.
சோனி லைவ் (Sony Liv) செயலியை 10 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது 12 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இந்திய ஓடிடி சந்தையில் இது 6% இடத்தை பிடித்துள்ளது.
ஜீ5( ZEE5) இந்த செயலிக்கு 7.5 மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இது இந்திய சந்தையில் 5% வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் இந்தியா (Netflix India) இது 100 கோடி கருவிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 5.5 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி இது இந்திய ஓடிடி சந்தையில் 8% இடத்தை பிடித்துள்ளது.
இனி வருவாய் அடிப்படையில் பார்த்தால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை தான் முன்னிலையில் இருக்கிறது. இந்த ஓடிடி தளத்தின் வருவாய் 16.7 பில்லியன் டாலர்கள், நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் வருவாய் 16.7 பில்லியன் டாலர்கள், அமேசான் பிரைம் வீடியோவின் வருவாய் 6.38 மில்லியன் டாலர்கள் ஆகும். இதில் நெட்ஃபிளிக்ஸின் வருவாய் 2023ஆம் நிதியாண்டில் 2,286 கோடி ரூபாய் என 24% உயர்ந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications