பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு.. எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?

சென்னை: இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இல்லாத வகையில் 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு இலக்கத்தை எட்டி 11.19 சதவீதமாக இருக்கிறது.

தமிழ்நாட்டின் ஜிடிபி: அண்மையில் மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் நாட்டிலேயே ஜிடிபியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் தமிழ்நாடு மட்டும்தான் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது என்பதும் தெரியவந்தது. கடைசியாக கடந்த 2010 -2011 ஆம் ஆண்டில் தான் தமிழ்நாடு அரசு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு.. எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?

இரட்டை இலக்க வளர்ச்சி: 2010 - 2011 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 13.1 % என இருந்தது. அதன் பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டி இருக்கிறோம். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிக்கு சில குறிப்பிட்ட துறைகள் தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. உற்பத்தி துறை , கட்டுமானம் , ரியல் எஸ்டேட் உள்ளிட்டவை தான் தமிழ்நாட்டின் இந்த சிறப்பான பொருளாதார வளர்ச்சிக்கு காரணம்.

உற்பத்தி துறை பங்களிப்பு அபாரம்: 2023 - 24 ஆம் நிதியானில் தமிழ்நாட்டில் உற்பத்தி துறையின் வளர்ச்சி என்பது 12.6 சதவீதமாக இருந்து 2024 -25ஆம் நிதியாண்டில் 14.7 சதவீதம் என உயர்வு கண்டிருக்கிறது. கட்டுமான துறையை பொறுத்தவரை 2023-24 ஆம் நிதியாண்டில் 11.6% இருந்த அதன் வளர்ச்சி 2024-25 ஆம் நிதி ஆண்டில் 15.9 % என வளர்ந்திருக்கிறது .அந்த வகையில் பார்த்தால் இரண்டாம் நிலை துறைகள் தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு.. எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?

ரியல் எஸ்டேட் : அடுத்ததாக ரியல் எஸ்டேட் பங்களிப்பும் மாநிலத்தின் ஜிடிபிக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறது . 2023- 24 ஆம் நிதியாண்டில் 7.3 சதவீதமாக இருந்த ரியல் எஸ்டேட் வளர்ச்சி இந்த ஆண்டு 12.42 சதவீதம் என அதிகரித்து இருக்கிறது. பொது நிர்வாகம் ,போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவையும் மாநிலத்தின் பொருளாதாரத்தில் இரட்டை இலக்க பங்களிப்பை தந்திருக்கின்றன .

வேளாண்மையில் வளர்ச்சி இல்லை: பிரைமரி செக்டார் எனப்படும் பிரதான துறைகள் என பார்த்தால் வேளாண்மை ,மீன்பிடிப்பது ,சுரங்கம் உள்ளிட்டவை இதற்குள் அடங்கும் . இவை ஒரு மிதமான வளர்ச்சியைதான் அடைந்திருக்கின்றன .கடந்த ஆண்டு 1.2 சதவீதமாக இருந்த இவற்றின் பொருளாதார பங்களிப்பு இந்த ஆண்டு 3.2 சதவீதம் என உயர்ந்திருக்கிறது. வேளாண்மை துறை எதிர்பார்த்த வளர்ச்சியை பெறவில்லை.

என்ன காரணம்: கொரோனா காலத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசு உற்பத்தி ரீதியாக தன்னை சரியான நிலையில் வலுப்படுத்தி இருப்பதே இந்த பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனஎ. தமிழ்நாடு அரசு பல்வேறு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் வந்து தொழில் தொடங்குவதை எளிமையாக்கி இருக்கிறது . எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் போன்கள், கார் , இரு சக்கர வாகனங்கள், காலணி, ஜவுளி மற்றும் ஐடி துறை என பல துறைகளிலும் தமிழ்நாடு அரசு நிறுவனங்கள் வந்து தொழில் தொடங்குவதற்கும் உற்பத்தி தொடங்குவதற்கும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

இண்டஸ்ட்ரியல் பவர் ஹவுஸ் : இந்தியாவின் இண்டஸ்ட்ரியல் பவர் ஹவுஸ்-ஆக தொடர்ந்து தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்குகின்றன . எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கான உதயம் பதிவில் தமிழ்நாட்டிலிருந்து தான் 25 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் வேளாண் துறை மட்டும் நெகட்டிவான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. 2022-23 ஆம் நிதியாண்டில் இது 6.4 சதவீதமாக இருந்து கடந்த ஆண்டு -1.96 என குறைந்திருந்தது இது இந்த ஆண்டு -1.83 ஆக இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+