டெல்லி: சர்வதேச நாடுகளில் மக்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து நடத்திய ஒரு ஆய்வில் , வேலையின்மையே பெரிய பிரச்சனையாக இருப்பதாக கண்டறியப்பட்டது.
குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு 1 கோடி பேர் தங்களது வேலையினை இழந்து தவித்து வந்தனர். எனினும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ள பொருளாதாரத்தினால், இது படிப்படியாக குறைந்து வந்தாலும், தொடர்ந்து சில மாநிலங்களில் வேலையின்மை விகிதம் என்பது இன்றும் மோசமான நிலையே இருந்து வருகின்றது.
நகர்புறங்களில் வேலையின்மை அதிகம்
இந்தியாவில் சமீபத்திய மாதங்களாக வேலையின்மை விகிதமானது குறைவதாக தோன்றினாலும், நகர்புறங்களில் இன்றளவும் அதிகளவிலேயே இருந்து வருகின்றது. எனினும் கிராமப்புறங்களில் சற்றே வேலையின்மை விகிதமானது குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தொழில் துறை மற்றும் சேவைத் துறையில் வேலையின்மை விகிதம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சேவையில் அதிகரிக்கும் வேலையின்மை
தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சேவைத் துறையில், வேலையின்மை விகிதம் இன்னும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. ஏற்கனவே பல டெக் ஜாம்பவான்கள் தங்களது புதிய பணியமர்த்தலை குறைத்துள்ளன. இது இனி வரவிருக்கும் மாதங்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைப்பட்டால் ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யவும் தயாரான நிலையே இருந்து வருகின்றன.
எந்த மாநிலத்தில் அதிகம்?
சிஎம்ஐஇ (CMIE) தரவின் படி, ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் மாநில வாரியாக எங்கு அதிகம்:
ஹரியானா - 37.3%
ஜம்மு & காஷ்மீர் - 32.8%
ராஜஸ்தான் - 31.4%
ஜார்கண்ட் - 17.3%
திரிபுரா - 16.3%
டெல்லி - 8.2%
பஞ்சாப் - 7.4%
மேற்கு வங்கம் - 7.4%
ஹிமாச்சல பிரதேசம் - 7.3%
தமிழ் நாடு - 7.2%
தெலுங்கானா - 6.9%
கேரளா - 6.1%
ஆந்திர பிரதேசம் - 6%
எங்கு குறைவு?
CMIE தரவின் படி, ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் மாநில வாரியாக எங்கு குறைவு:
சட்டீஸ்கர் - 0.4%
மேகாலயா - 2.0
மகாராஷ்டிரா - 2.2%
ஓடிசா - 2.6%
கர்நாடகா - 3.5%
உத்தரபிரதேசம் - 3.9%
புதுச்சேரி - 5.2%
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications