டெல்லி: வரும் 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட்டை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் எவ்வாறு செயல்படும் என்பதை இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கடந்த மாதம் இந்தியாவின் ஈக்விட்டி பெஞ்ச் மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 5 சதவீதம் உயர்ந்துள்ளன. இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் முதலீட்டாளர்கள் ஈக்விட்டி சந்தையில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நிஃப்டி 0.3 சதவீதம் சரிவையும், பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த ஒரு வாரத்தில் 0.5 சதவீதம் சரிவையும் கண்டுள்ளது. ஆனால் சராசரியாக பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த ஒரு மாத காலத்தில் நிஃப்டி 5.7 சதவீதம் என உயர்ந்துள்ளது.
எனவே பட்ஜெட்டுக்கு பிறகு வழக்கமாகவே தொழில் துறை, எரிசக்தி துறை, மெட்டீரியல்ஸ் , உள்கட்டமைப்பு துறை ஆகியவை கணிசமான ஏற்றத்தை காணும். குறிப்பாக எரிசக்தி துறை மற்றும் தொழில்துறை, மக்கள் நேரடியாக வாங்கி பயன்படுத்தக்கூடிய பொருட்கள் சம்பந்தப்பட்ட துறைகள் வளர்ச்சி காணும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இந்த துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
சில மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளை அரசு வெளியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது ,அதே வேளையில் வருமான வரி விகிதங்களில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பல்வேறு உள்கட்டமைப்பு சார்ந்த அறிவிப்புகளை அரசு வெளியிடும் என தெரிகிறது. இதன் காரணமாக பங்குச்சந்தை ஏற்றம் காண்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஷேர்லான், ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட தரகு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளன. ஹிந்துஸ்தான் யுனிலிவர் ,ஐடிசி , டாபர் இந்தியா , இமாமி, ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, எம் & எம், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக், எல்&டி, என்டிபிசி, கோல் இந்தியா,டாடா பவர், சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்ஏஎல், பாரத் ஃபோர்ஜ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவன பங்குகளை வாங்கலாம் என பரிந்துரைத்துள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications