ஏஐ தொழில்நுட்பம் பல துறையில் பல மாற்றங்களைச் செய்து வருவது மூலம் பலர் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். ஆனால் இதே ஏஐ தொழில்நுட்பம் அதிக முதலீடு செய்ய முடியாத, அதிக ஊழியர்களை பணியில் அமர்த்த முடியாத, குறைவான கட்டமைப்புகளைக் கொண்டே புதிய வர்த்தகத்தையும், புதிய சந்தையைக் கைப்பற்ற வேண்டும் எனத் துடிக்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
சப்ளை செயின் நிறுவனங்களை நிர்வாகம் செய்வது, சந்தையில் உற்பத்தி பொருட்களுக்கான விலையை டிராக் செய்வது, புதிய வாடிக்கையாளர்களைக் கைப்பற்றுவது, ஏஐ மூலம் விளம்பரம் செய்வது, தினமும் செய்யப்படும் வேலையை ஆட்டோமேஷன் செய்வது எனப் பல வேலைகளை ஊழியர்களின் அவசியம் இல்லாமல் ஏஐ மூலம் செய்ய துவங்கியுள்ளது இந்திய MSME நிறுவனங்கள்.

ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு MSME துறையில் புதிய தொழில்நுட்ப மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல் MSME நிறுவனங்கள் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை வரப்பிரசாதமாகப் பார்க்கத் துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் ஏஐ தொழில்நுட்பத்தை ஒவ்வொரு பிரிவிலும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது.
இந்திய ஜிடிபியில் 31.1 சதவீத பங்கீட்டையும், உற்பத்தியில் 35.4 சதவீத பங்கீட்டையும், ஏற்றுமதியில் 48.58 சதவீத பங்கீட்டையும் கொண்டு இருக்கும் இந்திய MSME நிறுவனங்கள் தற்போது பொருட்களின் பேகேஜ் டிசைன் முதல் பொருட்களுக்கு போட்ர்போலியோ உருவாக்குவது, மொழி தெரியாத நபர்களிடம் அவர்களிடம் சொந்த மொழியில் பேசி புதிய ஆர்டர்களை வாங்குவது வரையில் ஏஐ பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
இந்தியாவில் இருக்கும் 7.47 கோடி MSME நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தினசரி பிரச்சனைகளுக்கு ஏஐ தீர்வுகளை அளிக்கிறது. இதேவேளையில் பெரிய தொழில்நுட்பத்தை வாங்க வேண்டும் என்ற நிதி நெருக்கடிக்கும் தள்ளப்படவில்லை. ஆனால் இதை முறையாக நடைமுறைப்படுகிறதா என்ற கேள்வியும் அச்சமும் உள்ளது.
குறிப்பாக நேற்று ஐரோப்பிய நாடுகளில் சூப்பர்மார்கெட் ஹேக் செய்யப்பட்டது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் வந்துவிடக் கூடாது என்ற அச்சமும், எச்சரிக்கையும் இத்துறை வல்லுனர்கள் விடுத்துள்ளனர்.
MSME நிறுவனங்கள் ஏஐ பயன்படுத்துவது வாயிலாக சுமார் 490 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார மதிப்பை உருவாக்க முடியும் என கூகுள் மற்றும் இந்திய SME அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் டிஜிட்டல் டூல்களை அதிகளவில் பயன்படுத்துவது மூலம் 60 சதவீத சிறு குறு நிறுவனங்களின் சுமார் 2 மடங்கு அதிக வருவாய் ஈட்டி வருகிறது. இதேபோல் ஏஐ பயன்படுத்துவது மூலம் 30 -35 சதவீதம் அதிக லாபத்தை ஈட்டி வருகிறது.
இதன் மூலம் இந்திய தொழிற்துறையிலும், சேவை துறையிலும் ஏஐ பயன்படுத்துவது மூலம் நாட்டின் ஜிடிபி சுமார் 1.7 டிரில்லியன் டாலர் அளவிலான கூடுதல் ஜிடிபி மதிப்பீட்டை 2035க்குள் பெற முடியும் சமீபத்திய நித்தி அயோக் அறிக்கையிலே் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடித்தக்கது.


Click it and Unblock the Notifications
