கொரோனா பாதிப்புக் காரணமாக இந்தியாவில் பல கோடி மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்த நிலையில், கடந்த சில மாதங்களாகப் புதிய லேவைாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக வொயிட் காலர் வேலைவாய்ப்புப் பிரிவில் பல முன்னணி நிறுவனங்கள் கொரோனா முன் எந்த அளவிற்கு ஊழியர்களைப் பணியில் சேர்த்ததோ, அதே அளவிற்குத் தற்போது மீண்டும் வந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காலத்தில் எம்என்சி, ஸ்டார்ட்அ போன்ற நிறுவனங்களின் வருவாய் மற்றும் வர்த்தகப் பாதிப்புக் காரணமாக அதிகளவிலான பல லட்சம் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் வொயிட் காலர் வேலைவாய்ப்புப் பிரிவில் அதிகமானோர் வேலையை இழந்தனர்.
தற்போது இந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.
முக்கிய நிறுவனங்கள்
கேப்ஜெமினி, வேர்ல்பூல், டாடா ஸ்டீல், வேதாந்தா, பிலிப்ஸ், நெஸ்லே, டெலாய்ட், லிவ்ஸ்பேஸ், பெப்சிகோ மற்றும் மிந்திரா ஆகிய நிறுவனங்கள் கொரோனா முன்பிருந்த அளவீட்டில் ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருவதாகக் கூறியுள்ளது.
மேலும் இந்நிறுவனங்களில் புதிதாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள் முதல் கட்ட ஊழியர்களாக மட்டும் அல்லாமல் உயர் நிலை பதவிகள் வரையில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
லாக்டவுன் காரணமாக வர்த்தகப் பாதிப்பாலும், நிதிப் பற்றாக்குறையாலும் பெரிய அளவில் பாதிப்புகளை எதிர்கொண்டது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான். இந்நிலையில் ஜூலை - அக்டோபர் காலகட்டத்தில் இண்டர்நெட் நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
சுமார் 80 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
இண்டர்நெட் சேவை நிறுவனங்கள்
2019ஆம் ஆண்டை விடவும் 2020ல் இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடந்த வருடத்தை விடவும் இண்டர்நெட் சேவை நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 சதவீதம் அதிகம்.
அக்டோபர் 2019 முதல் அக்டோபர் 2020 வரையிலான காலத்தில் சுமார் 40,000 வேலைவாய்ப்புகளை இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தரவுகள் அனைத்தும் வொயிட் காலர் வேலைவாய்ப்பு சந்தையைப் பற்றியது.
மொத்த இந்தியா
அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.31 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
இந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 6.98 சதவீதமாக அதிகரித்துள்ளதாகச் சிஎம்ஐஇ (CMIE) தரவுகள் கூறுகின்றது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.67 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நகரப்புற வேலைவாய்ப்புகள்
இதில் நல்ல விஷயம் என்னவெனில் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.15 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications