இந்தியாவின் மோசமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், கொரோனா இந்திய வேலைவாய்ப்பு சந்தையை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது என்றால் மிகையில்லை. ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் பல லட்சம் ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இந்திய வேலைவாய்ப்பு சந்தையைக் குறித்துச் சர்வதேச வேலைவாய்ப்பு சந்தை மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி இணைந்து ஆய்வு செய்த முக்கியமான ஆய்வறிக்கையில் ஆசிய மற்றும் பசிபிக் பகுதியில் இருக்கும் நாடுகளின் வேலைவாய்ப்பு சந்தை குறித்து முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை குறித்து முக்கியமான தகவல் வெளியிட்டுள்ளது சர்வதேச வேலைவாய்ப்பு அமைப்பு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி.
இந்தியா
கொரோனாவால் இந்திய வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான அளவிற்குப் பாதிப்பு அடைந்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால் அது மொத்தமான தகவல். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் குறிப்பிட்ட ஒரு பிரிவு ஊழியர்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
இது இந்திய பொருளாதாரத்தையும், வர்த்தகச் சந்தையிலும் பெரிய அளவில் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வொயிட் காலர் ஜாப்
வொயிட் காலர் ஜாப் எனப்படும் நிலையான வேலை, அதிகளவிலான சம்பளம் கிடைக்கும் உயர் தர வேலைவாய்ப்புகளை இந்திய மக்கள் அதிகளவில் இழந்து வருகின்றனர் எனச் சர்வதேச வேலைவாய்ப்பு அமைப்பு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா வளரும் நாடாக இருக்கும் நிலையில், வொயிட் காலர் ஜாப் என்பது மிகவும் முக்கியமானதாகவும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக இருக்கிறது.
CMIE அமைப்பு
CMIE அமைப்பின் தரவுகள் படி ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில் இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்றும், இது மே மாதத்தில் 1 லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஆனால் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1.89 கோடியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இழப்பு
இதுகுறித்து CMIE அமைப்புக் கூறுகையில், இந்தியாவில் சம்பள வேலைவாய்ப்புகள் எளிதாக இழக்கக் கூடியது இல்லை, ஆனால் ஒருமுறை இந்தச் சம்பள வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டால் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. தற்போது சம்பள வேலைவாய்ப்புப் பிரிவில் வேலையை இழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டின் நிலையை அடையவே இந்தியாவில் இன்னும் 1.9 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
3 காலாண்டு
மேலும் சர்வதேச வேலைவாய்ப்பு அமைப்பு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 3ல் இரண்டு பங்கு நிறுவனத்தில் அப்பரன்டீஸ் மற்றும் அடுத்த 3 காலாண்டுகளுக்கு இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்புகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்தப் பாதிப்பால் தற்போது வேலைவாய்ப்பில் இருப்பவர்களை விடவும் 15 முதல் 24 வயதுடைய மாணவர்கள், பட்டதாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது என ஆய்வறிக்கை. இந்தப் பாதிப்பின் எதிரொலி அடுத்த சில வருடங்கள் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
புலம்பெயர் ஊழியர்கள்
கொரோனா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் இந்தியாவில் கூலி வேலையில் இருப்பவர்கள் தான் அதிகளவிலான வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் வேலைவாய்ப்பை இழந்த பெரும்பலனோர் சொந்த ஊருக்குச் சென்றனர். இக்காலகட்டத்தில் மத்திய அரசு உருவாக்கிய திட்டத்தின் வாயிலாகப் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது.
அதிகளவிலான ஊழியர்கள் புலம்பெயர்ந்தால் பெரு நகரங்களில் இருக்கும் ஊழியர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்புக் கிடைத்தது. இதன் மூலம் கூலித் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புப் பிரச்சனை குறைந்தது.
வேலைவாய்ப்பு இழப்பு
ஆனால் தற்போது இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறைந்ததால் வர்த்தக வளர்ச்சி இல்லாமல், புதிய வர்த்தகம் எதுவும் இல்லாமல் பல துறைகள் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது ஊழியர்கள் பணிநீக்கம் செய்து வருகிறது.
இதனால் இந்தியாவில் வொயிட் காலர் ஜாப் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அதிகளவிலானோர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இது இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாகவே உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications