ஈரான் போர் இருக்கட்டும் முதல்ல உடம்ப பாருங்க: அதிபர் டிரம்புக்கு மருத்துவர்கள் விடுத்த முக்கிய எச்சரிக்கை!!

உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பிஸியான ஒரு நபர். அமெரிக்க அரசை கவனிக்க வேண்டும், நிர்வாகத்தை மேற்பார்வையிட வேண்டும், உலக அரசியலில் அமெரிக்காவின் இடத்தை தக்க வைக்க வேண்டும், தன்னுடைய சொந்த தொழில்களை கவனிக்க வேண்டும் என பல வேலைகளை கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதலே டிரம்ப் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலிலும் போரிலும் ஈடுபட்டு இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு முழுவதுமே வர்த்தக மோதலை கையில் எடுத்து இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முதலில் வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுத்து அதிபரையே சிறை பிடித்தார். இதன் பின்னர் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஈரான் மீது போரை தொடங்கினார். உலகமே இந்த ஈரான் போரின் தாக்கத்தை கடுமையாக சந்தித்துள்ளது.

ஈரான் போர் இருக்கட்டும் முதல்ல உடம்ப பாருங்க: அதிபர் டிரம்புக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!!

ஈரான் போர் இழுபறியாகவே நீடிக்கிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மனநிலை சரியில்லை, உடல்நிலை சரியில்லை என பல்வேறு தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. கூடிய விரைவில் டிரம்ப் தன்னுடைய 80ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த சூழலில் அவருக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் அடங்கிய அதிகாரபூா்வ அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

Also Read

இதன்படி, டிரம்ப்பின் இதயம், நுரையீரல், நரம்பியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளும் மிகவும் சீராக இருக்கின்றன. உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைக்க மருந்துகள் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 108 கிலோ உடல் எடை கொண்ட டிரம்ப் முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வவழங்கியுள்ளனர்.

உடல் எடை அவரது வயதுக்கும் உயரத்திற்கும் சற்றே அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வேண்டும் அது தவிர்த்து தமது அரசு பொறுப்புகளை முழுமையாகத் திறம்படச் செய்ய நல்ல உடல் தகுதியுடன் உள்ளாா் என்று அவரின் தனிப்பட்ட மருத்துவா் ஷான் பாா்பபெல்லா தெரிவித்துள்ளாா்.

Recommended For You

டிரம்பை பொறுத்தவரை அண்மைகாலமாக அவர் உடற்பயிற்சியே செய்யாமல் இருக்கிறார் அதனால் தான் உடல் எடை கூடுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமுடையவர் டிரம்ப் எனவே அதனை அதிகமாக விளையாடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க வரலாற்றில் அதிபராகப் பதவியேற்றவர்களில் அதிக வயது முதிர்ந்த நபர் டொனால்ட் டிரம்ப் . அவர் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, அவருக்கு வயது 78 (78 ஆண்டுகள், 220 நாள்கள்) ஆகும்.டிரம்புக்கு வயது 80-ஐ நெருங்கிவிட்டாலும் அவருடைய இதயம் சீராகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும் அவருடைய வயதைவிட உடல்ரீதியாக அவருடைய இதயம் 14 ஆண்டுகள் இளமையாகவே உள்ளதாம்.

அமெரிக்கா அதிபராக இருக்கக்கூடிய நபரின் உடல்நிலை ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அந்த தகவல்கள் வெளியிடப்படும் அந்த வகையில் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் நான்காவது முறையாக அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே வயது மூப்பு காரணமாக டிரம்புக்கு கால்களில் வீக்கம், உடல் தளர்வு ஆகியவை தென்படுகின்றன. அது மட்டும் இல்லாமல் அவருக்கு சில நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+