இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்டார். இதில் இந்திய பொருளாதார செயல்பாடுகளில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது எனப் பட்டியலிடப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுக் காலப் பொருளாதாரச் செயல்பாடுகளைப் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டுக் காலப் பொருளாதாரச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு 'வெள்ளை அறிக்கை' வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

2014-ல் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருந்தது, பொது நிதியியல் அளவுகள் மோசமான நிலையில் இருந்தது, பொருளாதார முறைகேடு மற்றும் நிதி ஒழுங்கின்மை இருந்தது, மற்றும் பரவலாக ஊழல் இருந்தது எனப் பஜேபி அரசு தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் 'வெள்ளை அறிக்கை'யில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கியமான விஷயங்களை. இப்போது பார்ப்போம்.
- UPA அரசு ஆட்சி அமைக்கும் போது மிகவும் ஆரோக்கியமான பொருளாதாரத்தைப் பெற்று, பல சீர்திருத்தங்கள் கொண்டு வர தயாரானாலும் அதன் பத்து ஆண்டுகளில் பொருளாதாரத்தைச் செயல்படாதா ஓன்றார மாற்றியது என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- UPA அரசு 1991 சீர்திருத்தங்களுக்குப் பொறுப்பேற்கத் தவறியது மட்டும் அல்லாமல் 2004ல் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பற்றி விவாதத்தைக் கைவிட்டனர்.
- 2009 மற்றும் 2014க்கு இடைப்பட்ட ஆறு நிதியாண்டுகளில் நாட்டின் அதிகப்படியான நிதிப் பற்றாக்குறை சாமானிய மற்றும் ஏழைக் குடும்பங்களில் துயரத்தில் ஆழ்த்தியது.
- 2009 மற்றும் 2014க்கு இடையில் பணவீக்கம் அதிகரித்தது.
- வங்கி நெருக்கடி UPA அரசாங்கத்தின் மிக முக்கியமான மற்றும் பிரபலமற்ற பிரச்சனைகளில் ஒன்றாகும்.
- UPA அரசாங்கத்தின் கீழ், அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 2011 இல் சுமார் 294 பில்லியன் டாலரில் இருந்த ஆகஸ்ட் 2013 இல் சுமார் 256 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
- நிலக்கரி ஊழல் 2014ல் நாட்டை உலுக்கியது.
- 2ஜி ஊழல் மற்றும் கொள்கை முடக்கம் காரணமாக இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை ஒரு பொன்னான காலகட்டத்தை இழந்தது.
- பொருளாதார வளர்ச்சியில் தவறான நிர்வாகம், நாட்டின் வளர்ச்சித் திறனைக் குறைத்தது மற்றும் இந்தியா ஒரு பலவீனமான பொருளாதாரமாக மாறியது.
- பொருளாதாரத்தில் விரைவான திருத்தங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, NDA அரசாங்கம் துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டது. இதன் மூலம் உறுதியான கட்டமைப்பை உருவாக்கியது என இந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அரசியல் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மையுடன் NDA அரசு, முந்தைய UPA அட்சி போலல்லாமல், பொருளாதார நலனுக்காகக் கடுமையான முடிவுகளை எடுத்தது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 2014 இல் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் இருந்தது. அப்போது வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தால், எதிர்மறையான சூழ்நிலையை உருவாகியிருக்கக் கூடும், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டாயம் உடைத்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- UPA அரசு நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் பெரும் தோல்வியடைந்தது. இதனால் நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறைக்கும், கருவூலத்திற்குப் பெரும் வருவாய் இழப்புகளைக் கொண்டு வரும் வகையில் ஏராளமான மோசடிகள் நடந்தது.
- கடந்த பத்து ஆண்டுகளில், முந்தைய UPA அரசாங்கம் விட்டுச் சென்ற சவால்களை NDA அரசு வெற்றிகரமாக முறியடித்தது. மேலும் NDA அரசு'nation-first' என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த அறிக்கை கூறியுள்ளது.
- 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இலக்கு என்பதால், இன்னும் பல மையில்கள், பல மலைகளைக் கடக்க வேண்டும் என்று மத்திய அரசின் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications