இந்தியாவின் ஐ.டி. தலைநகராக உள்ள பெங்களூருவில் வீட்டு வாடகை விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி, சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால், ஐடி நிறுவனங்களில் மீண்டும் ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களில் மீண்டும் ஒரு பணிநீக்கம் வரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஒரு Reddit பயனர், "பெங்களூருவில் வாடகை விலை ஏன் இந்த மாதத்தில் இவ்வளவு குறைந்தது?" என்று கேள்வி எழுப்பினர். இந்த பதிவு சாதாரணமானதாக இருந்தாலும், பலர் அதில் தங்களது அனுபவங்களையும், கவலைகளையும் பகிர்ந்து, இது ஒரு பெரிய விவாதமாக மாறியது.

வாடகை விலை குறைய என்ன காரணம்..?: சில ஐடி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாகவே ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. மேலும், வீட்டில் இருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தி வருகின்றன. மேலும், புதிய வேலைவாய்ப்புகள் மந்தமாக இருக்கும் சூழலில், புதிதாக வரும் ஊழியர்கள் பெரிதளவில் பெங்களூருவுக்கு குடிபெயரவில்லை.
பெங்களூருவில் வாடகை விலை குறைவது என்பது சந்தையின் நிலையை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறி ஆகும். இது ஒரு பொருளாதார மாற்றம் மட்டுமல்ல. வேலைவாய்ப்பு நிலை, ஐடி துறையின் வளர்ச்சி மற்றும் ஊழியர்களின் மனநிலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. நிறுவனங்கள் வாடகை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வீட்டில் இருந்தே பணியாற்ற பரிந்துரை செய்கின்றன.
குறிப்பாக, வைட்ஃபீல்ட் (Whitefield) பகுதியில் ரூ.40,000 செலவில் 2BHK கிடைப்பது தற்போது சாதாரணமாக இருக்கிறது என்ற ஒரு ரெடிட் பயனர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட், பெரும் விவாதத்தை தூண்டியிருக்கிறது. அந்த பதிவில் அவர், "கடந்த 5 மாதங்களுக்கு முன் ரூ.40,000-க்கு ஒரு நல்ல அப்பார்ட்மெண்ட் கிடைக்கவே இல்லை. ஆனால், இன்று நிறைய இருக்கிறது. இதனால், வாடகை குறைந்து விடுமா..? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒரு பயனர் பதிலளிக்கையில், "Layoffs fear. பெங்களூரு முழுக்க ஐ.டி. துறைதான் பிரதானம். வேலை நிலைத்தன்மை குறைவதால் மக்கள் வீடு வாங்கும் திட்டங்களை தள்ளி வைக்கின்றனர். சேமிப்பையே முதன்மை ஆக்குகிறார்கள். இதன் தாக்கமாக வாடகை தேவை குறைகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், "கடந்தாண்டு Return to Office கட்டாயமாக அறிவிக்கப்பட்டதால் வாடகை உயர்ந்தது. ஆனால், இப்போது layoffs நடக்கின்றன; அதிக சம்பளத்தை வாடகைக்கு செலவிட யாரும் விரும்பவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே, தொழில்நுட்ப துறையில் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல கட்டங்களில் cloud, ad-tech, hardware பிரிவுகளில் பணி இடைவிடாமல் குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டிவைசஸ் பிரிவுகளில் ஊழியர்கள் குறைக்கப்பட்டனர்.
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற முன்னணி இந்திய ஐ.டி நிறுவனங்கள், புதிய ஆட்சேர்ப்பை மந்தமாக்கியுள்ளன. இதெல்லாம் செலவைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும், ஏ.ஐ. மற்றும் தானியங்கி கருவிகளின் வளர்ச்சியுடன் நிறுவனங்கள் செயல்திறனை அதிகரிக்கலாம் என நம்புகின்றன. 2025, ஏ.ஐ வளர்ச்சி ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாலும், மனித ஊழியர்களுக்கான வேலைநிலைத்தன்மை குறையும் ஆண்டாகவே மாறியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications