இந்தியாவின் டாப் 10 தனியார் முதலாளிகள் பட்டியல்..எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருங்காங்க பாருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் சிறந்த நிறுவனங்களும், அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கை குறித்தும், பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 என்ற தலைப்பில் தனியார் வங்கியின் வணிக நிறுவனமான பர்கண்டி பட்டியலிட்டுள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் முதலிடத்தில் உள்ளது.

டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் 5,92,195 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை கொடுத்த டிசிஎஸ் நிறுவனம், சர்வதேச அளவில் பல நாடுகளில் தனது சேவையினை செய்து வருகின்றது.

 இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார் தெரியுமா.. அம்பானியும் அதானியும் டாப்பு.. ! இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் யார் தெரியுமா.. அம்பானியும் அதானியும் டாப்பு.. !

சிறந்த நிறுவனங்கள்

சிறந்த நிறுவனங்கள்

இந்த சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் டாப் 10 நிறுவனங்களில் முதலிடத்தில் டிசிஎஸ் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் குவெஸ் கார்ப்பும் இடம் பெற்றுள்ளது.

தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் பர்கண்டி பிரைவேட் நிறுவனம், டிசம்பர் 1ம் தேதி பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 அறிக்கையினை வெளியிட்டன.

டாப் 5

டாப் 5

முதலிடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் 5,92,195 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இதே இரண்டாவது இடத்தில் உள்ள குவெஸ் கார்ப்பில் 4,36,907 வேலைகளும், மூன்றாவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 3,40,000 ஊழியர்கள், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 3,14,015 பேரும், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் 2,52,217 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.

டாப் 6 - 10

டாப் 6 - 10

ஆறாவது இடத்தில் விப்ரோ நிருவனத்தில் 2,47,073 பேரும், ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 2,24,834 பேரும், எஸ் ஐ எஸ் நிறுவனத்தில் 1,44,017 பேரும், ஹெச் டி எஃப் சி வங்கியில் 1,41,579 பேரும், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் 1,28,564 பேரும் பணி புரிந்து வருகின்றனர்.

சந்தை மதிப்பின் அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள்

சந்தை மதிப்பின் அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள்

ரிலையன்ஸ் இண்ஸ்டஸ்ட்ரீஸ் - ரூ.17,25,058 கோடி

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் - ரூ.11,68,390 கோடி

ஹெச் டி எஃப் சி வங்கி - ரூ.8,33,656 கோடி

இன்ஃபோசிஸ் - ரூ.6,46,985 கோடி

ஐசிஐசிஐ வங்கி - ரூ.6,33,171 கோடி

பார்தி ஏர்டெல் - ரூ.4,89,575 கோடி

ஹெச் டி எஃப் சி - ரூ.4,48,844 கோடி

ஐடிசி - ரூ.4,32,359 கோடி

அதானி டோட்டல் - ரூ.3,96,245 கோடி

அதானி எண்டர்பிரைசஸ் - ரூ.3,81,610 கோடி

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: டாப் 10 top 10
English summary

Who are the top 10 private employers in India? How many people work?Burgundy Private Hurun India 500

India's leading IT company TCS has topped the Burgundy Pvt Hurun India 500 list
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X