WHO உயர் பதவியிலிருந்து தமிழ் பெண்ணான சௌமியா சுவாமிநாதன் ராஜினாமா.. யார் இவர்..?

சென்னை: உலகச் சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானியாக இருக்கும் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் நவம்பர் 30 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார்.

சௌமியா சுவாமிநாதன் மார்ச் 2019 இல் WHO இன் முதல் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார். ஐஎம்எப் அமைப்பின் உயர் பதவியில் இந்தியாவை தேர்ந்த கீதா கோபிநாத் உயர் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் யார் தெரியுமா..? இவருடைய தந்தை உலகளவில் பிரபலமான விஞ்ஞானி ஆவார்.

எம்.எஸ். சுவாமிநாதன்

எம்.எஸ். சுவாமிநாதன்

சௌமியா சுவாமிநாதன் சென்னையில் பிறந்தவர், இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் இந்தியக் கல்வியாளர்களில் பிரபலமான மீனா சுவாமிநாதன் ஆகியோரின் மகள் ஆவார்.

சௌமியா சுவாமிநாதன் சகோதரிகள்

சௌமியா சுவாமிநாதன் சகோதரிகள்

சௌமியா சுவாமிநாதனுக்கு இரண்டு உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர். ஒருவர் மதுரா சுவாமிநாதன் இவர் பெங்களூரில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். மற்றொருவர் நித்யா சுவாமிநாதன் இவர் East Anglia பல்கலைக்கழகத்தில் பாலின பகுப்பாய்வில் சர்வதேச வளர்ச்சி பிரிவின் மூத்த விரிவுரையாளராக உள்ளார்.

எம்.பி.பி.எஸ்.

எம்.பி.பி.எஸ்.

சௌமியா சுவாமிநாதன் எம்பிபிஎஸ் பட்டத்தைப் புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் இருந்து பெற்றார். அவர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) கல்லூரியிலவ் குழந்தை மருத்துவத்தில் எம்டி பட்டம் பெற்றார்.

தேசிய தேர்வு வாரியம்

தேசிய தேர்வு வாரியம்

இதே தொடர்ந்து சௌமியா சுவாமிநாதன் தேசிய தேர்வு வாரியத்தின் டிப்ளோமேட் ஆவார். அவரது மருத்துவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, 1987 முதல் 1989 வரை நியோனாட்டாலஜி மற்றும் குழந்தை நுரையீரல் ஆகியவற்றில் அமெரிக்காவில் பெல்லோஷிப்பை முடித்தார்.

உலகச் சுகாதார அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பின் (WHO) உலக அளவிலான பதவிகளில் 5 ஆண்டுப் பணியாற்றிய பிறகு, சௌமியா சுவாமிநாதன் ஆராய்ச்சி மற்றும் கொள்கையில் நேரடியாகக் களத்தில் இறங்கி பணிகளைச் செய்ய மீண்டும் என்ற முடிவுடன் இப்பதவியை விடுத்து இந்தியா வர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

காசநோய் மற்றும் எச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்

காசநோய் மற்றும் எச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்

சௌமியா சுவாமிநாதன் இந்தியாவில் மிகவும் பிரபலமான குழந்தை நல மருத்துவர் மட்டும் அல்லாமல், காசநோய் மற்றும் எச்.ஐ.வி பற்றிய உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளர் ஆவார். டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் 30 வருட அனுபவம் கொண்டவர்.

WHO தலைமை விஞ்ஞானி

WHO தலைமை விஞ்ஞானி

WHO தலைமை விஞ்ஞானி பொறுப்பிற்கு முன்பு சௌமியா சுவாமிநாதன் இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சிக்கான செயலாளராகவும், 2015 முதல் 2017 வரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலாகவும் இருந்தார்.

சுகாதாரக் கொள்கை

சுகாதாரக் கொள்கை

இந்தக் காலகட்டத்தில், சௌமியா சுவாமிநாதன் சுகாதாரக் கொள்கையை அறிவியல் மற்றும் ஆதாரங்களைக் கொண்டு உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினர். இதேபோல் இந்திய மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சி திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.

பிற முக்கியப் பொறுப்பு

பிற முக்கியப் பொறுப்பு

2009 முதல் 2011 வரை, ஜெனீவாவில் வெப்பமண்டல நோய்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காகவும் UNICEF/UNDP/World Bank/WHO உருவாக்கிய சிறப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகச் சௌமியா சுவாமிநாதன் பணியாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+