ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம், பிரபல தொழிலதிபர் விரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுடன் இன்று நடைபெறுகிறது.
மும்பையின் பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்தத் திருமண விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கடந்த ஓராண்டாக ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்டின் திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

இந்த நிகழ்ச்சிகளில் மணமக்கள் பலவிதமான கண்கவர் ஆடம்பரமான விலை உயர்ந்த ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தனர். ராதிகா மெர்ச்சன்ட் உடையில் வைரங்கள் பதிக்கப்பட்ட டிசைனர் ஆடையும் இருந்தது.
இப்போது திருமண ஆடை எப்படி இருக்கும்? அதை டிசைன் செய்யப்போகும் பிரபல டிசைனர் யார்? திருமண ஆடை என்ன மாதிரியான டிசைனில் இருக்கும்? அதை தேர்ந்து எடுக்கப்போவது யாரு? என்ற கேள்விகள் விருந்தினர்கள் மற்றும் அம்பானி குடும்ப உறவினர்கள் மத்தியில் பரபரப்பாக எழுந்துள்ளது.
முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் மகளான ஈஷா அம்பானி தனது திருமணத்துக்கான ஆடையை 2018இல் செலிபிரிட்டி டிசைனர் இரட்டையர்களான அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவை தேர்ந்தெடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஸ்லோகா அம்பானியும் அதே செலிபிரிட்டி டிசைனர்களைத் தான் தனது திருமண ஆடையை டிசைன் செய்யத் தேர்ந்தெடுத்தார்.
அந்த வரிசையில் ராதிகாவும் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவை தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஆனால் யார் அந்த டிசைனர் என்பது இதுவரையில் தெரியவில்லை, நாளை வெளியாகும் புகைப்படத்தின் வாயிலாக தான் தெரியப்போகிறது.
Isha Ambani: ஈஷா அம்பானி பிரபல தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்தை அம்பானி இல்லமான அன்டிலாவில் 2018 டிசம்பர் 12 ஆம் தேதியன்று மணமுடித்தார். திருமணத்தன்று 16 பேனல் கொண்ட காக்ராவை அணிந்திருந்தார். சிறப்பான கைவினை எம்பிராய்டர்கள் அந்த காக்ராவில் செய்யப்பட்டிருந்தது.
மேலும் முகலாய ஜாலிஸ், பூ அலங்கார பேனல்களுடன் மாறி மாறி அதிசிறந்த ஜர்தோஸி, வாஸ்லி, முகாய்ஷ், நாக்ஷி வேலைப்பாடுகள் கொண்ட பேனல்கள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு பேனலும் கிறிஸ்டல்கள் மற்றும் ரத்தினங்களால் ஹைலைட் செய்யப்பட்டிருந்தது. இந்த காக்ராவுடன் தனது தாயார் நீதாவின் 5 ஆண்டு பழைய திருமண நாள் சேலையை வாங்கி அதை லெஹங்காவாக அணிந்திருந்தார் ஈஷா அம்பானி.
Shloka Mehta: அதேவேளையில் ஸ்லோகா மேத்தா தனது சிவப்பு மற்றும் பொன்னிற லெஹங்காவில் ஒரு தேவதை போல அற்புதமாகக் காட்சியளித்தார். அவரது துப்பட்டா மற்றும் சோலியில் நுணுக்கமான தங்க எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தையல் நூல் தங்க இழைகளால் ஆனது.
தலையில் பன் வைத்து கூந்தல் டிசைனை வைத்திருந்தார். கழுத்துக்கு அருமையான பச்சை நிற குந்தன் சோக்கர் அணிந்து ஜோடியாக நீண்ட செயின் அதற்கு இணையாக காதணிகள் அணிந்திருந்தார் ஸ்லோகா மேத்தா.
ஆகாஷ் அம்பானிக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் திருமணம் ஜியோ வேர்ல்டு சென்டரில் 2019 மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்றது. ரோஸி புளூ டயமண்ட்ஸ் அதிபர்கள் மோனா மற்றும் ரஸ்ஸல் மேத்தாவின் இளைய மகள் ஸ்லோகா மேத்தா.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சுப ஆசிர்வாத நிகழ்ச்சி மறுநாளான ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. திருமணத்தின் கடைசி நிகழ்ச்சியாக ஜூலை 14 ஆம் தேதியன்று திருமண வரவேற்பு நடைபெறுகிறது.
Story written by: jayachandran
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications