பிட்காயின்களின் மதிப்பு தடாலடியாக உச்சத்தை எட்டி இருப்பதால் அது பற்றி தான் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்திய ரூபாயில் ஒரு பிட்காயினின் விலை சுமார் 55 லட்சம் ரூபாய் ஆகும். பிட்காயின்களின் மதிப்பு இப்படி தாறுமாறாக உயர்வதற்கு அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களே காரணம்.
டிஜிட்டல் கரன்சியாக பார்க்கப்படும் கிரிப்டோகரன்சி வகைகளில் முக்கியமான ஒன்று பிட்காயின். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் சேமித்து பயன்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது.

ஆனால் பிட்காயின் என்பதை மைனிங் என்ற செயல்முறையின் மூலம் ஒருவர் பணம் இல்லாமல் பிட்காயின்களை பெற்ற முடியும், ஆனால் இந்த மைனிங் அமைக்க அதிகப்படியாக செலலிட வேண்டியிருக்கும்.
சில நிறுவனங்கள், சில நாடுகள் தங்கள் பொருட்களை வாங்க பிட்காயின்களை கூட பணமாக பெற்று கொள்கின்றன. சில நாடுகளில் பிட்காயின்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் பிளாக்செயின் என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. உலகளவில் பெரு நிறுவனங்கள் தான் அதிகளவில் பிட்காயின்களை வாங்கி குவித்துள்ளன.
உலகிலேயே அதிக அளவில் பிட்காயின்களை கையகப்படுத்தியுள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் மைக்ரோ ஸ்ட்ராடஜி ஆகும். இந்த நிறுவனம் 1,74,530 பிட்காயின்களை வைத்துள்ளது. இவற்றின் மதிப்பு 9.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். வெர்ஜீனியாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த சாப்ட்வேர் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு முதன்முறையாக பிட்காயின்களை வாங்கத் தொடங்கியது. பின்னர் படிப்படியாக அதிகரித்து தற்போது முதலிடத்தில் உள்ளது.
உலக அளவில் பிட்காயின்களை வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது கேலக்ஸி டிஜிட்டல் நிறுவனம். இது 17,518 பிட்காயின்களை கொண்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 912 மில்லியன் டாலர்கள் ஆகும். அடுத்ததாக மாரத்தான் டிஜிட்டல் நிறுவனம் 13,716 பிட்காய்களை கொண்டுள்ளது. இதன் மதிப்பு 714 மில்லியன் டாலர்கள்.
பிட்காயின்களில் முதலீடு செய்யப் போவதை வெளிப்படையாக அறிவித்த நிறுவனம் டெஸ்லா. பிட்காயின்களை கொண்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில் இது நான்காவது இடத்தில் உள்ளது. டெஸ்லா நிறுவனம் 10,100 பிட்காயின்களை கொண்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 546 மில்லியன் டாலர்கள். பிட்காயின்களில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களாகவே இருக்கின்றன.
இரண்டு நிறுவனங்கள் கனடாவை சேர்ந்தவை மற்றும் ஜப்பானை சேர்ந்த நெக்சான் நிறுவனமும் பிட்காயின்களை வாங்கி குவித்து வைத்துள்ளது.
பல்வேறு பெரு நிறுவனங்களும் கார்ப்ரேட் நிறுவனங்களும் பிட்காயின்களில் முதலீடு செய்வதை அதிகரித்துள்ளதால் பிட்காயின் மதிப்பும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications