டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வு ஒட்டுமொத்த நாடே உற்று நோக்க கூடிய ஒரு நிகழ்வாகும். நமது நாட்டின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது அரசு என்னென்ன திட்டங்களை கொண்டு வரப் போகிறது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த பட்ஜெட் தாக்கல் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய எட்டாவது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கமாக நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்குவார். கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

முன்பெல்லாம் பட்ஜெட் ஆவணத்தைக் கொண்டு நிதி அமைச்சர்கள் அவற்றை வாசிப்பார்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டிலிருந்து டேப் கொண்டுவரப்பட்டு அதன் மூலம் பட்ஜெட் உரை வாசிக்கப்படுகிறது. பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு இத்தனை நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வரையறை எதுவும் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடிய அல்லது பட்ஜெட் உரையை வாசிக்கக்கூடிய நேரம் மாறுபடுகிறது.
சராசரியாக 90 நிமிடங்களில் இருந்து 120 நிமிடங்களுக்குள் மத்திய பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டுவிடும். சில சமயங்களில் 120 நிமிடங்களை கடந்தும் சில சமயங்களில் 90 நிமிடங்களுக்குள்ளாகவும் பட்ஜெட் வாசிக்கப்பட்டுவிடும்.
இந்தியாவைப் பொறுத்தவரை நீண்ட நேரம் பட்ஜெட் உரையை வாசித்தவர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு தான் இருக்கிறது. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை 162 நிமிடங்களுக்கு வாசித்தார். அது இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட நேரம் நிகழ்ந்த பட்ஜெட் வாசிப்பு என்ற பெயரை பெற்றது.
நீண்ட நேரம் பட்ஜெட் உரையை படித்ததால் கடைசி இரண்டு பக்கங்களை படிக்காமலேயே தன்னுடைய பட்ஜெட் தாக்கலை அவர் முடித்துக் கொண்டார். 2003 ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் 133 நிமிடங்களுக்கு பட்ஜெட் வாசித்தார் .அதுவே மிக நீண்ட நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆக இருந்தது பின்னர் நிர்மலா சீதாராமன் அந்த சாதனையை முறியடித்தார்.
அதிக வார்த்தைகள் கொண்ட பட்ஜெட்டை வாசித்தவர் என்ற பெருமை மன்மோகன் சிங்கையே சாரும். அவர் 18,650 வார்த்தைகளை படித்திருக்கிறார் .மிகக் குறைந்த பட்ஜெட் உரை வாசிப்பு என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஹெச் எம் பட்டேல்.
1977 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை வாசித்த போது வெறும் 800 வார்த்தைகள் கொண்ட ஆவணத்தை தான் அவர் தாக்கல் செய்தார். கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 58 நிமிடங்களிலேயே பட்ஜெட்டை வாசித்து முடித்தார்.
Story Written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications