கோடிகளில் புரளும் கோலிவுட்! சூப்பர் ஸ்டார் vs தளபதி - இந்தியாவின் காஸ்ட்லி நடிகர் யார்?

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக நம்பர் 1 என்ற அந்த சிம்மாசனம் யாருக்கு என்ற கேள்வி ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய விவாதமாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம், 75 வயதிலும் தனது ஸ்டைலாலும், வசூலாலும் உலகையே மிரள வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மறுபக்கம் ஒவ்வொரு படத்திலும் முந்தைய வசூல் சாதனைகளை தூள் தூளாக்கி, தற்போது இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகராக, விஸ்வரூபம் எடுத்துள்ள வசூல் மன்னன் தளபதி விஜய்.

குறிப்பாக தளபதி விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்னதாக நடிக்கும் தளபதி 69 படத்திற்காக பெறும் பிரம்மாண்ட சம்பளம், ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே வேளையில், கூலி படத்தின் மூலம் ரஜினிகாந்த் மீண்டும் தனது அரியணையை உறுதிப்படுத்தி வருகிறார். கோடிகளில் புரளும் இந்த சம்பள போட்டியில், உண்மையில் இந்தியாவின் காஸ்ட்லி நடிகர் யார்? கோலிவுட் உச்ச நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் சம்பளப் பட்டியலை பார்க்கலாம்.

கோடிகளில் புரளும் கோலிவுட்! சூப்பர் ஸ்டார் vs தளபதி - இந்தியாவின் காஸ்ட்லி நடிகர் யார்?

இந்திய சினிமா உலகின் வசூல் சக்கரவர்த்திகளாக திகழும் கோலிவுட் நட்சத்திரங்கள், இன்று பாலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் தங்களது சம்பளத்தை உயர்த்தியுள்ளனர். ஒரு பக்கம் ஒவ்வொரு படத்தின் மூலமும் வசூல் வேட்டை நடத்தி, தற்போது இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தளபதி விஜய் உருவெடுத்துள்ளார். அவருடைய அரசியல் பயணத்திற்கு முன்னதாக கடைசி படமான தளபதி 69 ( ஜனநாயகன்) படத்திற்காக அவர் பெற்ற சம்பளம் சுமார் 275 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மறுபக்கம் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே குழந்தை முதல் பெரியவர்கள் வரையில் குதூகலமாகும் ரஜினிகாந்த், தன்னுடைய 75 வயதிலும் துள்ளிக்குதிக்கும் இளைஞர்களை போல பிளாக்பஸ்டர் வெற்றிகளுடன் வலம் வந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய கூலி படத்திற்கு அவருக்கு 100 - 200 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது ஜெயிலர் 2 படத்திற்காக 225 கோடி ரூபாய் சம்பளம் பேச படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருந்த இந்த பிரம்மாண்ட போட்டிகளுக்கு இடையே நிலவும் இந்த சம்பள போட்டியில், உண்மையில் யார் முதல் என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்தியாவில் இந்த அளவுக்கு ஒரு நடிகரின் சம்பளம் உயர்ந்திருப்பது உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உள்ளது.
தளபதிக்கு வழங்கப்பட்ட சம்பளம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் மற்றும் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி போன்றவர்களின் சம்பளத்தை விட இது அதிகம்.

உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த் தான், இந்தியாவில் அதிகம் வாங்கும் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். இவரின் ஜெயிலர் படம் 600 கோடி வசூல் சாதனை படைத்த நிலையில், அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended For You

இதுவே நம் உலக நாயகன் கமலஹாசனின் சொத்து மதிப்பு 388 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய ஆண்டு வருமானம் சுமார் 46 கோடி ரூபாய். இதே தல அஜித் -ன் மொத்த சொத்து மதிப்பு 350 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஒரு படத்திற்கு 105 - 120 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மாறுபட்ட ஒரு பன்முகத் திறமையாளரான தனுஷின் சொத்து மதிப்பு சுமார் 230 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய மாத வருமானம் 3 கோடி ரூபாய் என்றும். ஒரு படத்திற்காக 20 - 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+