பெண் உயில் எழுதாமல் இறந்தால் அவருடைய சொத்து யாரைச் சேரும்? கணவருக்கா?குழந்தைகளுக்கா? அல்லது பெற்றோருக்கா?

உயில் என்பது ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது சொத்துக்கள் யாரைச் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்க எழுதும் ஆவணம் ஆகும். உயில் எழுதாமல் ஒரு இந்துப்பெண் மரணமடைந்தால் அவர் சொந்த உழைப்பில் வாங்கிய சொத்துக்கள் யாருக்கு கிடைக்கும்? கணவர் உரிமை கோர முடியுமா? அல்லது குழந்தைகள், பெற்றோருக்கும் உரிமை உண்டா? என்பதை தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

நம் நாட்டில் மதங்களுக்கு ஏற்பவும் சில விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் உயில் எழுதாமல் ஒரு இந்துப்பெண் அல்லது ஆண் இறந்துவிட்டால் அவருடைய சொத்துக்களை எப்படி பிரிக்க வேண்டும் என்பதற்கு 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறது.

பெண் உயில் எழுதாமல் இறந்தால் அவருடைய சொத்து யாரைச் சேரும்? கணவருக்கா?குழந்தைகளுக்கா? அல்லது பெற்றோருக்கா?

ஒரு ஆண் உயில் எழுதாமல் இறந்து போனால் அவருடைய சொத்துக்கள் பிரிவு 8-இன் படி பிரித்தளிக்கப்பட வேண்டும். அதுவே ஒரு பெண் இறந்தால் பிரிவு 15-இன் கீழ் பிரிக்கப்படும். பெண் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த சொத்துக்கள், பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்துக்கள் மற்றும் கணவர், மாமனாரிடமிருந்து பெற்ற சொத்துக்களை எப்படி பிரிக்க வேண்டும் என்பதற்கு தனித்தனியான சட்டவிதிகள் இருக்கின்றன.

சுயமாக சம்பாதித்த சொத்து: பிரிவு 15-இன் கீழ் உயில் எழுதாமல் இறக்கும் ஒரு பெண்னின் சுய சம்பாத்திய சொத்துக்கள் அவருடைய பிள்ளைகள் மற்றும் கணவரையே சென்றடையும். இவர்களுக்கே முதல் உரிமை.

Also Read

இறந்த பெண்ணுக்கு பிள்ளைகள் இறந்திருந்தால்.. பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சொத்து சேரும். அதாவது தனது பாட்டியின் சொத்தை பேரக்குழந்தைகள் அனுபவிக்க முடியும். இரண்டாவதாக கணவர் மற்றும் பிள்ளைகள் யாருமே இல்லாத பட்சத்தில்.. கணவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சொத்து சேர வாய்ப்புள்ளது.

மூன்றாவதாக கணவரும் இல்லை.. பிள்ளைகளும் இல்லை.. கணவருக்கு வாரிசுகள் இல்லை.. இறந்த பெண் திருமணமாகாதவர் என்றால் அந்த சொத்துக்கள் அவருடைய தாய் தந்தையரை சென்றடையும். பெற்றோரும் இல்லாத பட்சத்தில் அவருடைய பெற்றோர்.. அதாவது தாய் தந்தையரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு சொத்துக்கள் சேரும். ஒரு பெண் தன்னுடைய சொந்த வருமானத்தில் வாங்கிய சொத்துக்களை அனுபவிக்க அவர் கணவர் மற்றும் குழந்தைகளுக்கே முன்னுரிமை உண்டு.

எந்தெந்த சொத்துக்களுக்கு மேல் கண்ட விதிமுறைகள் பொருந்தும்?: ஒரு பெண் தன்னுடைய பெற்றோரிடம் இருந்து வாரிசுரிமையாக பெற்ற சொத்துக்கள் முதலில் அவருடைய பிள்ளைகளுக்கு சேரும். பிள்ளைகள் இல்லாமல் இருந்தால் அந்த பெண் பெற்ற பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்து சேரும். அதாவது பாட்டியின் சொத்தை பேர குழந்தைகள் பெற முடியும்.

அந்தப் பெண்ணுக்கு பேர குழந்தைகளும் இல்லை பிள்ளைகளும் இல்லை என்றால் அவருடைய தந்தையின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்கப்படும். அதுவே கணவர் அல்லது மாமனாரிடமிருந்து வாரிசுரிமையாகப் பெற்ற சொத்துக்களாக இருந்தால்.. முதலில் அந்த பெண்ணின் பிள்ளைகளுக்கு சேரும். பிள்ளைகள் இல்லை என்றால் பெண்ணின் பெற்றோருக்கு செல்லாமல் கணவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு பிரித்து வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+