முன்னணி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆராய்ச்சி நிறுவனமான OpenAI, அதன் முதல் தலைமை பொருளாதார நிபுணராக ஆரோன் சாட்டர்ஜியை நியமித்துள்ளது. இதற்கு முன்பு ஆரோன் சாட்டர்ஜி அதிபர் ஜோ பைடனின் கீழ் வர்த்தகத் துறையில் தலைமை பொருளாதார நிபுணராகவும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலில் மூத்த பொருளாதார நிபுணராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அரசியல் வாழ்க்கையைத் தவிர, டியூக் பல்கலைக்கழகத்தில் வணிக மற்றும் பொதுக் கொள்கையின் புகழ்பெற்ற பேராசிரியராகவும் உள்ளார்.
ஆரோன் சாட்டர்ஜி ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் பொருளாதார தாக்கங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கவுள்ளார். பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை AI தொழில்நுட்பம் எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் அவரது ஆராய்ச்சி கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமனம், பொருளாதாரம் மற்றும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் புரிந்து கொள்ள உதவும்.

இளமைப் பருவம்: சிறுவயதிலிருந்தே எண்களின் மீது ஆர்வம் கொண்ட அரோன் சாட்டர்ஜி பொருளாதாரத்தில் தனது தொழிலைத் தொடங்க விரும்பினார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சாட்டர்ஜி 2000-ஆம் ஆண்டில் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
2006-ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் Ph.D பட்டம் பெற்றார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் முதன்மையாக தொழில்முனைவு, புதுமை மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன.
அரோன் சாட்டர்ஜி, அமெரிக்க கணினி சிப் வளர்ச்சிக்காக சுமார் $280 பில்லியன் வழங்கிய 2022 CHIPS சட்டத்தை செயல்படுத்துவதில் ஜோ பைடன் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
அவரது அறிவு மற்றும் அரசியல் தொடர்புகள், தனது சொந்த சிப் வடிவமைப்பு முயற்சிகளைத் தொடங்கும்போது OpenAI நிறுவனத்திற்கும் சாதகமாக இருக்கும். பொருளாதார நிபுணர் மட்டுமின்றி OpenAI புதிய சீப் காம்ப்ளயன்ஸ் அதிகாரியாக Scott Schools-ஐ பணியமர்த்தவுள்ளது. OpenAI-இன் நிர்வாகம் மற்றும் பிற குழுக்களுடன் சட்டத் தேவைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்து இவர் பணியாற்றுவார்.
சமீபகாலமாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் IT துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்த கேள்வியை கேட்டாலும் சில நிமிடங்களில் விடையை பெறும் வகையில் AI தொழில்நுட்பம் நம்மை ஆளத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு ஐடி நிறுவனங்களும் தங்கள் வேலையை செய்யும் வகையில் ஏஐ கருவிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் ஏஐ பணியாளர்களை பணியமர்த்துவதாக அதிர்ச்சி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும் இதனால் பிற வேலைவாய்ப்பின்மை ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஓபன் ஏஐ பனி அமர்த்தும் இந்த புதிய ரோலின் மூலம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் குறித்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications