வாரன் பஃபெட்டின் வலது கையாக இருப்பவர் ஒரு இந்தியரா..! யார் அவர்..?!

சர்வதேச அளவில் பங்குச்சந்தை முதலீடு என்ற உடன் நமது நினைவுக்கு வருபவர் வாரன் பஃபெட். அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்து பெருமளவு லாபமீட்ட முடியும் என்பதற்கு முன் உதாரணமாக திகழக் கூடியவர். இவரது சொத்து மதிப்பு 139 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலக பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார். வாரன் பஃபெட்டின் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவர் ஒரு இந்தியர் தெரியுமா?..

வாரன் பஃபெட்டின் வலது கையாக இருப்பவர் ஒரு இந்தியரா..! யார் அவர்..?!

அஜித் ஜெயின் ஒடிசா மாநிலத்தின் சந்தேகர் பகுதியில் பிறந்தவர். ஐஐடி கரக்பூரில் பி டெக் பயின்ரு ஐபிஎம்மில் சேல்ஸ்மேன் ஆக தன்னுடைய பணியை தொடங்கினார். இதனை அடுத்து அமெரிக்காவுக்கு சென்றவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றார். 1986 ஆம் ஆண்டில் வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷையர் ஹேத்வே நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

தற்போது அஜித் ஜெயின் பெர்க்ஷையர் ஹேத்வே நிறுவனத்தின் காப்பீடு பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறது. அஜித் ஜெயினிடம் உள்ள தொழில் யுக்தி மிக அரிதானது என்றும், அவரது மூளை ஐடியாக்களின் தொழிற்சாலை என்றும் வாரன் பஃபெட் பலமுறை இவரை புகழ்ந்துள்ளார்
அஜித் ஜெயின் கடந்த 1986 ஆம் ஆண்டு வாரன் பஃபெட்டின் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

அப்போது இந்த துறை குறித்து பெரிய புரிதலே இல்லாமல் தான் இருந்தாராம். ஆனால் தற்போது நிறுவனத்தில் முக்கிய நபராகவும் வாரன் பஃபெட்டுக்கு வலது கையாகவும் உயர்ந்திருக்கிறார்.அஜித் ஜெயின் சொத்து மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

அஜித் ஜெயின், வாரன் பஃபெட்டின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது காப்பீட்டு துறையில் நான்கு பேர் மட்டுமே பணியிலிருந்துள்ளனர். காலப்போக்கில் தொழிலை கற்றுக்கொண்டு வல்லவராக மாறிவிட்டார் அஜித் ஜெயின். இவரது திறமையால் இந்த காப்பீட்டு தொழிலானது 780 கோடி டாலர்களாக உயர்ந்தது. எனவே அஜித் ஜெயினை எப்பொழுதும் தன்னுடைய லக்கி மேன் என வாரன் பஃபெட் குறிப்பிடுவார்.

அஜித் ஜெயினின் பெற்றோர்கள் ஒடிசாவில் வசித்து வருகின்றனர். ஒரு சமயம் அவரது பெற்றோருக்கு கடிதம் எழுதிய வாரன் பஃபெட், அஜித்துக்கு சகோதரர்கள் யாரேனும் இருக்கிறார்களா அவர்களை நான் என் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்கிறேன், அஜித்தை போல அவர்களும் இந்நிறுவனத்தை பெருமளவில் வளர்ப்பார்கள் என அதில் எழுதி இருந்தாராம்.

அதே போல பெர்க்‌ஷையர் ஹேத்வே நிறுவனத்தின் துணை தலைவர் சார்லி மங்கரும், அஜித் ஜெயினும் ஒரு படகில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது படகு மூழ்குவதை போன்ற ஒரு சூழல் வந்தால் நான் அஜித் ஜெயினை தான் காப்பாற்றுவேன் என்றும் வாரன் பஃபெட் கூறியுள்ளார். அந்த அளவிற்கு அவரது மனதை கவர்ந்தவர் ஆகவும் தொழில்துறையில் வல்லவராகவும் உயர்ந்து முன் உதாரணமான நபராக இருக்கிறார் அஜித் ஜெயின்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+