பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இந்திய திரை உலகில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஒரு நடிகர் . இந்தி மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் அவ்வப்போது படங்களில் தோன்றுவார். எனவே நாடு முழுவதுமே இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். 80 வயதை கடந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு கூட ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமிதாப் பச்சன் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர். அமிதாப் பச்சன் மட்டுமல்ல அவர் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே திரை துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் என அடுக்கி கொண்டே போகலாம்.

இதனால் இவர்களின் குடும்பமே நட்சத்திர குடும்பம் தான். கோடீஸ்வர குடும்பம் என்று கூட சொல்லலாம். அமிதாபச்சன் குடும்பத்திலும் அதிகமாக பொதுவெளியில் வராத ஒரு நபர் இருக்கிறார். அவர் திரைத்துறையில் இல்லை என்றாலும் அவரும் கோடீஸ்வரர் தான். தொழில் உலகில் சாதனை படைத்தவர் அவர்.
அமிதாப் பச்சனின் இனம் சகோதரர் தான் அஜிதாப் பச்சன். அமிதாப் பச்சனின் சகோதரராக இருந்தாலும் இவர் ஒருபோதும் தன்னுடைய சகோதரரின் பிரபலத்தையும் அடையாளத்தையும் பயன்படுத்தியது கிடையாது . 1947 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி பிறந்தவர் தான் அஜிதாப் பச்சன். இவர் நைனிடால் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இவருக்கு சிறுவயதில் இருந்தே தொழில் தொடங்க வேண்டும் தொழில் உலகில் கால் பதித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
எனவே தன்னுடைய சகோதரர் திரைத்துறையின் கால் பதித்த போது இவர் அந்த பக்கம் செல்லாமல் தான் முழு நேர தொழில் அதிபராக மாற வேண்டும் என முடிவு செய்தார். தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு தொழில்களில் ஈடுபட தொடங்கினார். தற்போது அவர் Qa Hydrocarbons Private Limited, Asn Hydrocarbons Private Limited, Asn Innovative Private Limited ஆகிய மூன்று நிறுவனங்களின் இயக்குனராக இருக்கிறார்.
அமிதாப் பச்சனின் தோழியான ரமோலாவை தான் அஜிதாப் பச்சன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அஜிதாப்பிற்கும் ரமோலாவுக்கும் நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். ஒரு மகன் மூன்று மகள்கள் இருக்கின்றனர். அஜிதாப் பச்சனின் சொத்து மதிப்பு தற்போது 166 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்தில் இவரது நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications