பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனைத் தெரியாத சினிமா ரசிகர்களே இருக்கமாட்டார்கள். சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் அவரைப் பற்றியும், அவருடைய குடும்பம் குறித்தும் நன்றாகவே தெரியும். அவரது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் இவர்களும் சினிமாவில் மிகப் பிரபலம்.
ஆனால் அமிதாப் பச்சனுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவர் ஒரு தொழிலதிபர், அதுவும் ரூ.166 கோடி நிறுவனத்துக்கு சொந்தக்காரர் என்ற விஷயம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். அவரது பெயர் அஜிதாப் பச்சன். அமிதாப் பச்சனை விட ஐந்து வயது இளையவர்.

தி ஆர்ச்சீஸ் படத்தின் பிரீமியர் ஷோவில் கலந்துகொள்ள வந்தபோது அங்கிருந்தவர்களை அஜிதாப் பச்சனின் வரவு கவர்ந்தது. அமிதாப் பச்சன் குடும்பத்தைச் சேர்ந்த அகஸ்த்யா நந்தா நடித்த அறிமுகப் படம் தி ஆர்ச்சிஸ் என்பது கூடுதல் தகவல்.
தனது பிரபல அண்ணனைப் போல் அல்லாமல் அஜிதாப் பச்சன் ஒரு சங்கோஜப் பேர்வழி. பெரும்பாலும் பொதுவிழாக்களில் கலந்து கொள்ளவே மாட்டார். தான் உண்டு தனது தொழில் உண்டு என்றே இருந்து பழகி விட்டார். அமிதாப் பச்சன் குடும்பத்தினரைப் போல் அல்லாமல் அஜிதாப் பாலிவுட் பாதையில் இருந்து விலகி உள்ளார்.
அமிதாப்புக்கு நடிப்பின் மீது ஆர்வம். அஜிதாப்புக்கு தொழில் செய்வதில் ஆர்வம். இந்த விஷயத்தில் இருவரும் இரு துருவங்கள்.
அமிதாப்பைப் போலவே அஜிதாப்பும் உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் உள்ள ஷேர்வுட் கல்லூரியில்தான் படித்தார். படிப்பை முடித்தப் பின்னர் இந்தியாவில் சில ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு இங்கிலாந்துக்கு அஜிதாப் சென்றுவிட்டார். அங்கு அவர் ஒரு தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
Qa Hydrocarbons Private Limited, Asn Hydrocarbons Private Limited, Asn Innovative Private Limited ஆகிய நிறுவனங்களில் அஜிதாப் பச்சன் நிர்வாக வாரியத்தில் இயக்குநராக தற்போதுள்ளார்.
அவரது நிகர மதிப்பான 20 மில்லியன் டாலர், அஜிதாப்பின் பொருளாதார அந்தஸ்தைக் காட்டுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.166.68 கோடியாகும்.
ராமோலா பச்சன் என்ற பெண்ணை அஜிதாப்புக்கு பார்த்து திருமணம் செய்து வைத்தார் அமிதாப் பச்சன். அவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் பீம் பச்சன் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக உள்ளார்.
இரண்டாவது மகள் ஏரோநாட்டிகல் இஞ்சினியர், அடுத்தது நர்மதா பச்சன் கவிஞராகவும் போட்டோகிராபராகவும் உள்ளார். கடைசியாக நாய்னா பச்சன் பேங்கராக இருந்து பின்னர் நடிகராகி குனால் கபூரை மணந்துள்ளார்.
அஜிதாப் குடும்பத்தினர் இப்போது லண்டனில் வசிக்கின்றனர். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கோன் பனேகா குரோர்பதியை தொகுத்து வழங்கியபோது தான் சினிமாத்துறையில் நுழைந்ததற்குக் காரணமே தனது தம்பி அஜிதாப் பச்சன் தான் என்று சொல்லி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினார் அமிதாப்பச்சன்.
இதுபற்றி அமிதாப் நினைவுகூர்கையில், எனக்கு 5 வயது இளையவரான தம்பி தான் நான் படத்துறைக்குள் நுழையக் காரணம். அவர்தான் நீ கட்டாயம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றார். அப்போது நான் கொல்கத்தாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்னைப் பலவிதமான போஸ்களில் புகைப்படம் எடுத்து அதை பல்வேறு நிகழ்ச்சிக்கும், ப்ரொடெக்ஷன்-க்கு அனுப்பினார். அந்தப் படங்களை அவர்கள் நிராகரித்து விட்டனர். ஆனால் அதுவே எனது மூளையில் சினிமா பற்றிய விதையை விதைத்தது. அதுக்கப்புறம் என்ன! வேலையை தூக்கிப்போட்டுவிட்டு மும்பைக்கு வந்து விட்டேன். சினிமா சான்ஸும் கிடைத்தது. இன்றைக்கு உங்கள் முன்னால் பிக் பி- யாக இருக்கின்றேன் என்று நெகிழ்வோடு கூறினார் அமிதாப்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications