அமெரிக்காவின் அரசு நிர்வாகத்தை சீர்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசு செயல் திறன் துறையில் (DOGE) இந்தியா வம்சாவளியான 22 வயது பொறியாளர் ஒருவர் முக்கிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை அடுத்து அரசு நிர்வாகத்தை சீர்ப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசு செயல் திறன் துறை (DOGE) என்ற ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ளது.

இந்த துறைக்கு எலான் மஸ்க் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த அரசு செயல் திறன் துறை, அரசு பணியாளர்களை ஒழுங்கு படுத்துவது, அரசு பணிகளை இன்னும் செயல்திறன் கொண்டதாக மாற்றுவது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
இந்த துறையில் இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவரை பணிக்கு அமர்த்தி உள்ளார் எலான் மஸ்க். 22 வயதான ஆகாஷ் பொப்பா, எலான் மஸ்கால் நேரடியாக அரசாங்க செயல் திறன் துறையில் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகாஷ் பொப்பாவை தவிர்த்து 19 முதல் 24 வயதுக்கு உட்பட்ட மேலும் ஐந்து பேர் அரசு செயல் திறன் துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் எட்வர்ட் கோரிஸ்டின், லூக் ஃபாரிட்டர், கௌடியர் கோல் கிலியன், கேவின் கிளிகர் மற்றும் ஈதன் ஹாவோட்ரன் ஆவர்.
புதிதாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள 6 இளம் பொறியாளர்களில் சிலர் இன்னும் கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அரசு பணியாளர்கள் மேலாண்மை , பொது சேவை மேலாண்மை ஆகிய துறைகளில் இவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசின் ரகசிய தகவல்களை கையாளப் போகின்றனர்.
ஆகாஷ் பொப்பா பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் எதிர்கால தொழில்நுட்பத் துறை தலைவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட மேலாண்மை தொழில் முனைவர் மற்றும் தொழில்நுட்ப பாடத்தை படித்துள்ளார். இவர் மெடா, பலண்டீர், பிரிட்ஜ் வாட்டர் அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர்.
செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிட்டிக்ஸ், பைனான்சியல் மாடலிங் ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார் ஆகாஷ் பொப்பா. முன்னதாக இவருடைய நண்பர் ஒருவர் லிங்குடின் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பிராஜெக்ட் செய்ததாகவும் அப்போது எதிர்பாரா விதமாக கோடிங் முழுவதும் அழிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார், பிராஜெக்ட் சமர்ப்பிக்க இரண்டு நாட்களே இருந்த நிலையில் ஆகாஷ் பொப்பா மீண்டும் கோடிங்கை எழுதினார், கோடிங்கில் இவரை அசைக்க ஆள் இல்லை என கூறியுள்ளார்.
இதனிடையே ஆகாஷ் பொப்பா உள்ளிட்ட 6 இளம் பொறியாளர்களும் 24 வயதுக்கு உட்பட்டவர்கள், இவர்களால் அரசின் ரகசியமான தகவல்களை எப்படி கையாள முடியும், விதிகளை மீறி எலான் மஸ்க் இவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன்.
Story written by: Devika
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!



Click it and Unblock the Notifications