நோயல் டாடா வருகை.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பம்.. ஆலூ மிஸ்திரி லிங்க்!!

டாடா குழுமத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்துக்கொண்டும், இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமாகச் செயல்படும் டாடா டிரஸ்ட் அணைப்பின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு மும்பையில் நடைபெற்ற டாடா டிரஸ்ட் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதற்கும் பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பத்திற்கும் என்ன தொடர்பு..?

நோயல் டாடா, டாடா குழுமத்தின் முக்கிய பங்குதாரரான பல்லோன்ஜி மிஸ்திரியின் மருமகன் ஆவார். டாடா குடும்பத்திற்கும், மிஸ்திரி குடும்பத்திற்கும் சுமார் 80 வருட நட்பு உள்ளது, இந்த நட்பு காலப்போக்கில் பிஸ்னஸ் பார்ட்னராகவும், உறுவுக்காரர்களாகவும் ஆக்கியது.

நோயல் டாடா வருகை.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பம்..  ஆலூ மிஸ்திரி லிங்க்!!

இன்று பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பம் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனத்தில் சுமார் 18 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த பங்கு உரிமையின் வாயிலாகவே டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போது நோயல் டாடா-வும் இந்த பதவிக்குப் போட்டிப்போட்ட நிலையில் ரத்தன் டாடாவும், டாடா சன்ஸ் நிர்வாகமும் சைரஸ் மிஸ்திரியை தேர்வு செய்தது.

இந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி தான் புதிய டாடா டிரஸ்ட் தலைவரான நோயல் டாடாவின் மனைவி ஆவார். நோயல் டாடா நியமனத்திற்கு பின்பு அவருடைய மனைவி ஆலூ மிஸ்திரியைப் பற்றிய இணையத்தில் தேடல்கள் அதிகரித்துள்ளன.

ஆலூ மிஸ்திரி, இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான பல்லோன்ஜி மிஸ்திரியின் மகள் ஆவார். ஆனால் ஆலூ மிஸ்திரியைப் பற்றிய தகவல்கள் பொது வெளியில் அதிகம்கிடைக்கவில்லை. இதேபோல் ஆலூ மிஸ்திரி டாடா குழுமத்தின் எவ்விதமான பதவியிலும் இல்லை.

ஆலூ மிஸ்திரி மற்றும் நோயல் டாடாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் - லியா டாடா, மாயா டாடா மற்றும் நெவில் டாடா. 3 பேரும் தற்போது டாடா குழுமத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்து வருகின்றனர். சரி நோயல் டாடா நியமனத்திற்கு பல்லோன்ஜி மிஸ்திரி பட்டாசு வெடித்துக்கொண்டாட என்ன காரணம்..?

டாடா நிர்வாகத்திற்கும், பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பத்திற்கும் நீண்ட காலமாக ஒரு வழக்கு நடந்து வருகிறது. பல்லோன்ஜி மிஸ்திரி குடும்ப வைத்திருக்கும் டாடா சன்ஸ் பங்குகளை அடமானம் வைத்தோ அல்லது விற்பனை செய்தோ நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறது. டாடா நிர்வாகம் இதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது, இதேவேளையில் பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பத்தின் வர்த்தக சாம்ராஜ்ஜியம் நிதி ஆதாரம் இல்லாமல் பெரிய அளவிலான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பத்திற்கு டாடா டிரஸ்ட் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டதால் இந்த பிரச்சனைக்கு விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டிரஸ்ட் என்பது டாடா குழுமத்தின் முதுகெலும்பாகும். டாடா சன்ஸ் நிறுவனத்தில் விமான போக்குவரத்து முதல் ஆட்டோமொபைல் வரை பல்வேறு தொழில்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பரந்த வணிகப் பேராண்டில் டாடா டிரஸ்ட் சுமார் 66% பங்குகளை வைத்துள்ளது. எனவே, டாடா டிரஸ்டின் தலைவர் என்பவர் டாடா குழுமத்தின் மொத்த செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கு செலுத்துபவராக இருப்பார்.

நோயல் டாடா ஏற்கனவே டாடா டிரஸ்ட் நிர்வாகத்தில் இருந்து வருவதால், அவரது நியமனம் பங்குதாரர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர் டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், குழுமத்தின் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பேணுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ரத்தன் டாடா மறைவுக்குப் பின்னர், டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில், டாடா டிரஸ்ட் நிர்வாகம் அவசரமாக கூட்டம் நடத்தி, நோயல் டாடாவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரத்தன் டாடா தனது வாரிசை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாததால், இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் டாடா குழுமத்தின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நோயல் டாடா தனது முன்னோடிகளின் பாதையில் தொடர்ந்து பயணித்து, டாடா குழுமத்தை மேலும் உயரத்துக்கு எடுத்துச் செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+