ரத்தன் டாடா செய்த உதவியால் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் சிஓஓ இணை நிறுவனர் இன்று ரூ.37,000 கோடி மதிப்புமிக்க தொழிலை உருவாக்கியுள்ளார். மேலும் அபுதாபி முதலீட்டு ஆணையம் லென்ஸ்கார்ட் பங்குகளை வாங்குவதாக கூறப்படுகிறது.
லென்ஸ்கார்ட் நிறுவனம் அமித் சவுத்ரி, பெயுஷ் பன்சால், மற்றும் சுமித் கபாஹி ஆகியோரால் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இந்நிறுவனம் நஷ்டத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் 2021 மற்றும் 2022 களில் நல்ல லாபத்தை பதிவு செய்ய துவங்கியது.
அதுமட்டுமின்றி இந்நிறுவனம் KKR, சாப்ட்பேங்க் குழுமம், டெமாசெக் ஹோல்டிங்ஸ் மற்றும் பிரேம்ஜி இன்வெஸ்ட் உட்பட பல முதலீட்டாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
அபுதாபி முதலீட்டு ஆணையம்!
லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை அபுதாபி முதலீட்டு ஆணையம் வாங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதை உறுதி செய்தும் விதமாக லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை அபுதாபி முதலீட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
மேலும் லென்ஸ்கார்ட் முதலீட்டாளர்களில் ஒருவரான பெயுஷ் பன்சால் 48 மாதங்களுக்குள் இந்நிறுவனம் IPO வை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமித் சவுத்ரி!
லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் சிஓஓ மற்றும் இணை நிறுவனர் ஆவார். அமித் சவுத்ரி கொல்கத்தாவில் உள்ள பாரதி வித்யா பவனில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். பிஐடி மெஸ்ராவில் பொறியியல் பட்டம் பெற்றார்.
இவர் லென்ஸ்கார்ட் நிறுவனம் வளர முக்கிய காரணமாக இருந்துள்ளார். இவர் தொழில்துறையில் பகுப்பாய்வில் (analytics) ஆழ்ந்த புரிதல் கொண்டவர் என்பதால் நிறுவனத்தின் வளர்ச்சியில் இவரின் பங்கு பெரும் அளவில் இருந்துள்ளது. மேலும் லென்ஸ்கார்ட் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வியாபரத்தை வளர்த்ததில் பெரும் பங்கு வகித்துள்ளார்.
ரத்தன் டாடாவின் – ரசிகர்/வழிகாட்டி!
அமித் சவுத்ரி அவர்கள் ரத்தன் டாடா-வை அவரின் வழிகாட்டி என்று கூறியுள்ளார். கல்லூரி காலங்களில் அவர் வெற்றி பெற்ற தொழிலதிபர்களில் பலரின் வெற்றி கதைகளை படித்ததாகவும், அதில் ரத்தன் டாடாவின் கதை அவருக்கு உந்துகோளாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
Linkedin பதிவு
2019 ஆம் ஆண்டு இவர் முதன் முதலில் ரத்தன் டாடா அவர்களை சந்தித்தபிறகு நெகிழ்ச்சி அடைந்து, அவரின் Linkedin பக்கத்தில் அவர்களின் சந்திப்புக் குறித்து பெரிய பதிவை இட்டதையும் மறக்கமுடியாது என்று கூறியுள்ளார்
ரத்தன் டாடா-வுக்கும் லென்ஸ்கார்டி-க்கும் என்ன சம்பந்தம்!
லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் முதலீட்டாளராக இருந்துள்ளார் ரத்தன் டாடா. அவர் 2016 ஆம் ஆண்டில் லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் அமித் சவுத்ரி அவர்களுக்கு தொழில் வளர பல யோசனைகளைக் சொல்லி நல்ல வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
ரத்தன் டாடா முதலீடுகள்
ரத்தன் டாட்ட லென்ஸ்கார்ட் மட்டுமில்லாமல் Ola, Ola Electric, Cure.fit, FirstCry, Urban Company போன்ற நிறுவனங்களிலும் முதலீடு செய்து முதலிட்டாளராக இருந்துள்ளார்.
பெயுஷ் பன்சால்!
லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரான பெயுஷ் பன்சால் டெல்லியில் உள்ள டான் பாஸ்கோவில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். மெக்கில் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் பெங்களூர் IIM- இல் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு லென்ஸ்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது இவரின் சொத்து மதிப்பு ரூ.650 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications