கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் பிரபல அடல்ட் சப்ஸ்கிரிப்ஷன் பிளாட்பார்ம் தளமான ஒன்லி பேன்ஸ் சிஇஓவாகப் பதவியேற்றார் அமரபாலி ஆமி ஜான். மும்பையை சேர்ந்த 37 வயதான அமரபாலி ஆமி ஜான் கம்பெனியின் தலைமை மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் அலுவலராகப் பதவியேற்றார்.
கம்பெனியின் நிறுவனர் டிம் ஸ்டோக்லி விலகிய பின்னர் அடுத்து ஓராண்டுக்குள் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒன்லிபேன்ஸ் அதன் அடல்ட் கன்டன்ட்டுக்காக பல லட்சக்கணக்கான கிரியேட்டர்கள் தங்களது படைப்புகளை அளித்தனர்.

லண்டனை மையமாக வைத்து செயல்பட்ட இந்த பிளாட்பார்ம் விரைவிலேயே உலக அளவில் மிகப் பெரிய பில்லியன் டாலர் நிறுவனமாக உயர்ந்தது.
இந்தப் பிளாட்பார்மில் 180 மில்லியன் யூசர்களும் 3 மில்லியனுக்கும் அதிகமான கிரியேட்டர்களும் உள்ளனர். மிகப்பெரிய அளவில் கிரியேட்டர்களும் ரசிகர்களும் வந்ததால் இந்த பிளாட்பார்ம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சென்றடைய உதவியது என்று அமரபாலி ஜான் கூறுகிறார்.
மும்பையில் பிறந்த ஜான் அமெரிக்காவின் விர்ஜினியாவில் வளர்ந்தார். பப்ளிக் ரிலேஷன்ஸ் மற்றும் ஆர்கனைஷேஷனல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னர் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் தொழில்முனைவோருக்கான பட்டயப் படிப்பை முடித்தார். ஒன்லிபேன்ஸில் சேருவதற்கு முன்பாக ஆமி ஜான் ஆர்கேடு ஏஜென்சியில் கன்சல்டன்டாகப் பணியாற்றினார்.
அத்துடன் கேனபிஸ் கபேயில் (Cannabis Cafe) ஓராண்டு மார்க்கெட்டிங் மற்றும் பப்ளிசிட்டி துணைத் தலைவராக வேலை பார்த்தார். குறுகிய காலத்திலேயே ஒன்லிபேன்ஸின் சிஇஓவாக ஜானுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டபோது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவரது செயல்பாடு கம்பெனியை வேற லெவலுக்குக் கொண்டு சென்றது.
2022 ஆம் ஆண்டின் டைம்ஸ் 100 நெக்ஸ்ட் பட்டியலில் ஜான் இடம் பெற்றார். டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் ஜான் கூறுகையில், டெக் இண்டஸ்ட்ரியில் பல ஆண்களின் போட்டியை சந்தித்து தொழிலில் சிறப்பாகச் செயல்பட வேண்டியிருக்கிறது.
நமது சமுதாயத்தைப் பற்றி அறிந்து கொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். கிரியேட்டிவ் பொருளாதாரம் மற்றும் அடல்ட் என்டர்டெய்மென்ட் இண்டஸ்ட்ரிக்கு இந்த பிஸினஸ் எவ்வளவு பெரிய தடைக்கல்லாக இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
இந்தக் காலகட்டத்துக்கான பிளாட்பார்ம் ஒன்லிபேன்ஸ் என்று ஜான் கூறுகிறார். இந்த பிளாட்பார்ம் மூலம் படைப்பாளிகள் தங்களது ரசிகர்களுடன் எப்படி இணைந்துள்ளனர் என்பதை இங்கு பார்க்கலாம். பிளாட்பார்மின் சுதந்திரமான கொள்கைகள் படைப்பாளிகளை சிறப்பான அடல்ட் கன்டன்டை உருவாக்க உதவுகிறது.
இந்த பிளாட்பார்மை சப்ஸ்கிரிப்ஷன் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும். திரைக்குப் பின்னால் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து பிரபலங்களான கார்டி பி, விட்னி கம்மிங்ஸ் ஆகியோர் பல ரசிக்கத்தக்க படைப்புகளை அளித்துள்ளனர்.
ஒன்லிபேன்ஸில் ஜான் தனது நாய் foxx பற்றிய சிறிய விடியோக்கள், அன்றாட வாழ்வில் செய்யும் பேட்டிகள், நிகழ்ச்சிகள், தனது விருப்பங்கள், வெறுப்புகள் பற்றியும் பதிவிடுகிறார். மலையேற்றம், எக்ஸர்சைஸ்கள் போன்று உடல் ஆரோக்கியம் தொடர்பான பதிவுகளையும் வெளியிடுகிறார்.
தற்போதைய நிலவரப்படி கம்பெனியின் நிகர மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்கன் டாலராகும். இதை மேலும் அதிகரிக்க வேண்டுமென்பதே அமரபாலி ஜானின் நோக்கம். அமரபாலி தற்போது மியாமி, புளோரிடாவில் இருந்து செயல்படுகிறார். வாடிக்கையாளர்களின் விருப்பப்படி கிரியேட்டர்களை அணுகி சிறப்பான கன்டன்ட்களை தயாரித்து வருகிறார்.
2 வருடமாக onlyfans தளத்தை நிர்வாகம் செய்த மரபாலி ஆமி ஜான் ஜூலை மாதம் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் Keily Blair என்பவர் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications