கொச்சின்: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட கால நண்பரும் காதலருமான அந்தோணி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவாவில் இருவரது திருமணமும் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் யார் இந்த அந்தோணி தட்டில் என கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வலை வீசி தேடுகின்றனர். இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது, அசின் போன்ற பல பிரபலமான நடிகைகள் போல கீர்த்தி சுரேஷ் ஒரு தொழிலதிபரை மணக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் தமிழில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து மகாநடி, சர்க்கார், அண்ணாத்த, பைரவா, ரஜினி முருகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்தார் . இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதை அடுத்து முன்னணி நடிகையாக மாறினார்.
இதில் மகாநடி படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது பேபி ஜான் என்ற படத்தின் மூலமாக பாலிவுட் உலகத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிகையாக அறிமுகமாகிறார். தமிழில் வெளியான தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான்.
அண்மைக்காலமாகவே கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பதினைந்து ஆண்டு கால நண்பரும் காதலருமான அந்தோணி தட்டிலை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கீர்த்தியின் தந்தை ஒரு தளத்திற்கு அளித்த பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷும், அந்தோணி தட்டிலும் பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்களாம். கிட்டதட்ட 15 ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அண்மையில் தான் காதலை வெளிப்படுத்தி கொண்டார்களாம்.
Anthony Thatill: அந்தோணி தட்டிலைப் பொறுத்தவரை கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தற்போது கொச்சின் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தோணி தட்டில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு கத்தாரில் வேலை செய்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் கொச்சினுக்கு திரும்பிய அவர் ஜன்னல்களுக்கான நவீன திரைச்சீலைகள் தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
Asperos Window Solutions என்ற பெயரில் இவரது நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் Kaipalath Habeeb Farooque என்ற நிறுவனத்தின் முதன்மை உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கொச்சினில் இவர் ரிசார்ட்டுகளையும் நடத்தி வருகிறாராம். தொழில் ரீதியாக சென்னை, கொச்சி , துபாய் என பயணம் செய்து கொண்டே இருப்பவர் இவர்.


Click it and Unblock the Notifications