இந்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நிதி அயோக்-ன் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் பரமேஸ்வரன் உலக வங்கியின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள காரணத்தால், இவருடைய இடத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதன் மூலம் நிதி ஆயோக் அமைப்பின் முக்கிய முடிவுகளை இனி வரும் காலத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பிவிஆர் சுப்ரமணியம் எடுக்க உள்ளார். இவருடைய நியமனம் குறித்துத் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியானது.
யார் இந்தப் பிவிஆர் சுப்ரமணியம்..? இவருடைய நியமனம் ஏன் மிகவும் முக்கியமானதாக உள்ளது..?
நிதி அயோக்
நிதி அயோக் இந்தியாவின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சிக்கு அரசு எடுக்க வேண்டிய முடிவுகள், மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்து வருகிறது. நிதி அயோக் அமைப்பின் வாயிலாக மத்திய அரசு பல முக்கியமான திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நிதி அயோக் சிஇஓ-வாக இருந்த பரமேஸ்வரன் இடத்தில் பிவிஆர் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டு உள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பிவிஆர் சுப்ரமணியம் 2 ஆண்டுகள்
பிவிஆர் சுப்ரமணியம் நியமனம் குறித்து மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சுப்பிரமணியம் பதவிக்குப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுக் காலம் இப்பதவியில் இருப்பார். இவரின் செயல்பாடுகள் அடிப்படையில் பதவிக்காலம் நீட்டிக்கப்படும்.
உலக வங்கி தலைமையகம்
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய பரமேஸ்வரன், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் உலக வங்கியின் தலைமையகத்தின் செயல் இயக்குநராக மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் நிதி அயோக் சிஇஓ பதவியை விடுத்து அமெரிக்கா செல்ல உள்ளார் பரமேஸ்வரன்.
பரமேஸ்வரன் நியமனம்
பரமேஸ்வரன் ஹரியானா கேரட் 1988 பேட்ச் இந்திய நிர்வாகச் சேவை (ஐஏஎஸ்) அதிகாரியான ராஜேஷ் குல்லருக்குப் பதிலாக நியமிக்கப்பட உள்ளார். சரி யார் இந்தப் புதிய சிஇஓ பிவிஆர் சுப்ரமணியம்..? இவரும் ஐஏஎஸ் அதிகாரியா..?
பிவிஆர் சுப்ரமணியம் ஐஏஎஸ் அதிகாரி
நிதி அயோக்-ன் புதிய சிஇஓ பிவிஆர் சுப்ரமணியம் சத்தீஸ்கர் கேடரின் 1987-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரமணியம் ஆந்திராவை சேர்ந்தவர் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர். லண்டன் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாகப் பட்டமும் பெற்றவர்.
மன்மோகன் சிங்
2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுக்கு மத்தியிலான காலகட்டத்தில் 56 வயதான பிவிஆர் சுப்ரமணியம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் தனிச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். உலக வங்கியில் பணியாற்றிய பிறகு, அவர் 2012 இல் பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) திரும்பினார்.
பிரதமர் அலுவலகம்
பிவிஆர் சுப்ரமணியம் 2015 வரை பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றினார், அதன் பிறகு அவர் மீண்டும் சத்தீஸ்கருக்குச் சென்றார், அங்கு அவர் ஆரம்பத்தில் முதன்மைச் செயலாளராக இருந்து பின்னர்க் கூடுதல் தலைவராகச் செயலாளர் (உள்துறை) ஆக உயர்ந்தார்.
ஜம்மு காஷ்மீர்
2018 இல் பிவிஆர் சுப்ரமணியம் ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
முக்கிய அதிகாரி
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்திய வெளியிட்ட தகவல் படி ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவை அறிவிப்பதற்கு முன்பே அறிந்த ஒரு சில அதிகாரிகளில் சுப்ரமணியமும் ஒருவர். பின்னர் அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகச் செயலாளராக ஆனார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications