ஜென்சன் ஹுவாங்-கிற்கு 'பை பை'.. 4 டிரில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியத்தை கையில் எடுக்கும் புதிய பெண் சிஇஓ யார்..?

என்விடியா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான ஜென்சன் ஹுவாங் 2 பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை இந்நிறுவனத்தின் நிர்வாக குழு முழுமையான விசாரணையை நடத்த உள்ளதாக அறிவித்தது. இதன் விளைவாக என்விடியா பங்குகள் இன்று 13 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்த விசாரணை துவங்கும் முன்பே ஜென்சன் ஹுவாங் தனது தலைவர் பதவி, சிஇஓ பதவி, இயக்குநர் குழு உறுப்பினர் பதவி என 3 முக்கிய பொறுப்புகளில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடைய வெளியேற்றத்தை நிர்வாக குழு உடனடியாக ஒப்புக்கொண்டது.

ஜென்சன் ஹுவாங்-கிற்கு 'பை பை'.. 4 டிரில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியத்தை கையில் எடுக்கும் புதிய பெண் சிஇஓ யார்..?

இதை தொடர்ந்து என்விடியா நிர்வாக குழு புதிய இடைக்கால சிஇஓ நியமித்து, புதிய சிஇஓ தேர்வு செய்வதற்காக மூத்த அதிகாரி தலைமையிலான குழுவை அமைத்துள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு மூலம் என்விடியா பங்குகள் 13 சதவீத சரிவில் இருந்து தற்போது 5 சதவீத சரிவில் வர்த்தகமாகிறது.

என்விடியா நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியும், நிர்வாக துணைத் தலைவருமான கோலெட் கிரெஸ் (Colette Kress) புதிய சிஇஓ நியமிக்கப்படும் வரையில் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால சிஇஓ-வாக இருந்தாலும் சிஎப்ஓ பொறுப்பையும் தொடர்ந்து கவனிப்பார் கோலெட் கிரெஸ்.

மேலும் என்விடியா நிறுவனத்திற்கான நிரந்தர சிஇஓ-வை தேர்வு செய்யும் பணியை நிர்வாக குழு தொடங்கியுள்ளது. இதற்கான முதல் படியாகத் தனி தேர்வு குழு அமைந்துள்ளது, இந்த குழு தகுதியான நபரை நிறுவனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆய்வு செய்து நியமிக்கும்.

இதோடு என்விடியா நிர்வாகம் ஹார்வி சி.ஜோன்ஸ் என்பவரை என்விடியாவின் முதல் நிர்வாக குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. 73 வயதான இவர் சினாப்சிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஆவார், மேலும் இவர் என்விடியா நிர்வாக குழுவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+