மதுரை: ஐந்து ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு, மதுரையில் AIIMS கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது, மதுரை மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தென் தமிழ்நாட்டுக்கும் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் கட்டிய அதே நிறுவனம் தான் மதுரை AIIMS மருத்துவமனையையும் கட்டுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்..? மதுரை AIIMS மருத்துவமனையை கட்டுவது யார்..? மதுரை AIIMS-ல் என்னவெல்லாம் கட்டப்படுகிறது..? மதுரை AIIMS தலைவர் யார்..? மதுரை AIIMS பட்ஜெட் என்ன..? மதுரை AIIMS கட்டுமானம் எப்போது முடியும்..? அனைத்து கேள்விகளுக்கும் பதில் இங்கே..!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய AIIMS மருத்துவமனையின் கட்டுமான பணிகளை இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான சாம்ராஜ்ஜியமான லார்சன் & டூப்ரோ நிறுவனம் செய்கிறது. பல ஆண்டு தாமதத்திற்கு பின்பு வாஸ்து பூஜை உடன் செவ்வாய்க்கிழமை மதுரையில் AIIMS கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.
தாமதத்திற்கான காரணம்: ஜனவரி 27, 2019 ஆம் தேதி நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார், கடந்த வாரம் மோடி மதுரைக்கு வந்தார், அப்போது கட்டுமான பணிகளை துவங்கியிருக்கலாம், ஆனால் அதை செய்யவில்லை.

இதுக்குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சு. வெங்கடேசன் கூறுகையில் மத்திய அரசு எதிர்க்கட்சி மாநிலங்களை புறக்கணிக்கிறது என்ற தங்களின் கருத்தை நிரூப்பிக்கும் வகையில் 5 ஆண்டு தாமதத்துடன் துவங்கும் திட்டம் பெரும் அறிவிப்புகள் இல்லாமல் நடந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை AIIMS-ன் முக்கிய அம்சங்கள்: லார்சன் & டூப்ரோ நிறுவனம் மதுரை AIIMS கட்டுமானத்தை சுமார் 33 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது. இந்த புதிய வளாகத்தில், 1,08,325 சதுர மீட்டர் பரப்பளவில் 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம் (வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உட்பட), ஆயுஷ் பிரிவு, கற்பித்தல் பிரிவு, 750 இருக்கைகளை கொண்ட அரங்கம், மாநாட்டு அரங்கங்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி விடுதிகள், பணியாளர் பகுதி, AIIMS இயக்குநர் இல்லம், பேராசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகங்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.

திட்ட செலவு மற்றும் நிதி ஆதாரம்: இந்த இடத்தின் வளர்ச்சி பகுதி தவிர்த்து, மொத்த கட்டப்படும் பரப்பளவு சுமார் 2,00,851 சதுர மீட்டர் ஆகும். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜிகா) நிதியுதவியுடன் ரூ.1,978 கோடி மொத்த செலவில் மதுரையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள தொப்பூர் பகுதியில் AIIMS வளாகம் கட்டப்படவுள்ளது.
மருத்துவக் கல்லூரி செயல்பாடு: கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், AIIMS மதுரை மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருகிறது.
மத்திய அரசின் நியமனங்கள்: மத்திய அரசு, டாக்டர் எம். ஹனுமந்த ராவ் மற்றும் டாக்டர் பிரசாந்த் லவானியா ஆகியோரை AIIMS மதுரையின் நிர்வாக இயக்குநராகவும், தலைவராகவும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயில்: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி திறந்து வைத்த ராமர் கோயிலை கட்டியதும் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் தான். சென்னையை சேர்ந்த எஸ்என் சுப்ரமணியன் தலைமையில் தான் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.
JICA நிதியுதவி: மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதியுதவி செய்யும் ஜப்பான் நாட்டின் இதே JICA அமைப்பு தான் சென்னை பெரிஃபெரல் ரிங் சாலை திட்டத்தின் 2-வது கட்டத்திற்காக சுமார் ரூ.2,809 கோடி அதாவது 49,847 மில்லியன் ஜப்பானிய யென் கடனாக அளிக்க சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications